Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரேநாளில் விநியோகத்தை உறுதியளிக்கும் சரக்கியல் வழங்குநரான Hire1 ஒன்லைன் கொடுப்பனவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆதரவுகளை வழங்கக்கூடிய இணையவழி வர்த்தகத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் WEBXPAY உடன் கைகோர்த்துள்ளது.
இந்தக் கைகோர்ப்பின் ஊடாக இணையவழி வர்த்தகத்தில் நுழையும் புதிய, சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு WEBXPAY இன் ஒன்லைன் கொடுப்பனவுகள் உள்ளடங்கிய முழுமையான தீர்வு வழங்கப்படவுள்ளதுடன், குறித்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறித்த தினத்திலேயே விநியோகத்தை Hire1 மேலாண்மை செய்யவுள்ளது.
இலங்கையில் இணையவழி வர்த்தகம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதுடன், மிகப்பெரிய நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் வரையான அனைத்து நிறுவனங்களும் அதன் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை ஒன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகின்றன. இன்றைய வாடிக்கையாளர்கள் கடைகளுக்குச் செல்லாமல் தமது திறன்பேசிகள் ஊடாக விருப்பத்துக்கேற்ப கொள்வனவுகளை மேற்கொள்ள அதிகம் விரும்புகின்றனர்.
“ஒன்லைன் வர்த்தகத்தில் கொடுப்பனவுகள் மற்றும் சரக்கியல் ஆகியன மிக முக்கிய சேவைகளாகக் காணப்படுகின்றன. தரமான சேவை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை வழங்கிடும் எம்மைப்போன்ற குறிக்கோளைக் கொண்ட WEBXPAY உடன் இணைந்து பணியாற்றக் கிடைத்தமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கைகோர்ப்பு ஊடாக ஒன்லைன் வர்த்தகதுக்கு பெறுமதியைச் சேர்க்க நாம் எதிர்பார்த்துள்ளோம்” என Hire1 ஸ்தாபகர் பிரதம நிறைவேற்று அதிகாரி யெஷாந்த் குணவர்தன தெரிவித்தார்.
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago