2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

WhatsApp மற்றும் Viber ஊடாக கொமர்ஷல் வங்கிச் சேவைகள்

S.Sekar   / 2022 மே 16 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி Wbatsapp மற்றும் Viber செயலிகள் ஊடாக மும்மொழிகளிலும் வங்கிச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் முதல் தடவையாக இவ்வாறான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி நாட்டில் முதன்முதலாக அறிமுகம் செய்த சேவைகள் பட்டியலில் தற்போது இதுவும் இடம் பிடித்துள்ளது.

இதன் விளைவாக மேற்படி செயலிகளைப் பயன்படுத்தும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு மீதி விசாரணைகள், கணக்கு விபர மேலாய்வுகள், காசோலை புத்தகத்துக்கான வேண்டுகோள், கொம்பேங்க் டிஜிட்டலுடனான பதிவுகள், புதிதாக பிளாஷ் டிஜிட்டல் கணக்குகளை திறத்தல் போன்ற சேவைகளை தமக்கு தேவையான மொழிகளில் தெரிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இந்த சேவைகளைப் பெறுவதற்கான தொடர்பு கொள்ளலின் போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் என தமக்கு விருப்பமான மொழியைத் தெரிவு செய்து கொள்ளலாம் என வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி ஏற்கனவே மும்மாழிகள் மூலமான இணையத்தள சேவையைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை நலன் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஓரிட மும்மொழி தொடர்பாடல் மையத்தையும் அது கொண்டுள்ளது. இதன் மூலம் எழுத்து மூலமான தொடர்பாடல், வாடிக்கையாளர் தேவைகள், வாடிக்கையாளர் கருத்துக்கள் என்பனவும் சமூக ஊடகங்கள் வாயிலாக குறிப்பிட்ட குழுத் தலைவர்கள் மற்றும் பயிலுனர்கள் ஊடாகப் பெறப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X