Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
AMW நிறுவனம் இறக்குமதி செய்து விநியோகிக்கும் YAMAHA விற்பனை நாமத்தின் புதிய உள்ளம்சங்களாக FZS (Rear Disk) சைக்கிள் மற்றும் RAY-ZR Rally ஸ்கூட்டரை அண்மையில் AMW நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பான் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்யப்படும் இந்த இரண்டு வகையான மோட்டார் சைக்கிள்களும் துடிதுடிப்பான இளைஞர்களுக்கு தடையற்ற வேகத்தையும், சுண்டி இழுக்கும் கவர்ச்சியையும் ஒன்றுதிரட்டி இலக்குகளை நோக்கி பயணிக்கும் இளைஞர்களுக்காக இவ்விரண்டு மோட்டார் சைக்கிள்களையும் அறிமுகம் செய்துள்ளது.
YAMAHA Motor Company நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்போதும் ஆராய்ந்து அவர்களின் தேவைக்கேற்ப உற்பத்திகளை விற்பனை சந்தைக்கு அர்ப்பணிப்போடு அறிமுகம் செய்து வருவதாக இலங்கையின் அங்கிகாரம் கொண்ட ஒரேயொரு YAMAHA ஏகமுகவரான AMW நிறுவனத்தின் YAMAHA விற்பனை பிரதானி சஹாரான் சியவூதீன் தெரிவித்தார்.
ஏழு தசாப்த்தங்களின் பெருமைமிகு வரலாற்றைக் கொண்டுள்ள AMW நிறுவனத்தினால் இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும் YAMAHA மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உலக சந்தையில் மற்றும் இலங்கையில் விசேட விற்பனை அதிகாரத்தைக் கொண்டுள்ளமை YAMAHA விற்பனை நாமத்தின் சிறப்புத்தன்மையை எடுத்துரைக்கும் சிறப்பம்சமாக சுட்டிக்காட்ட முடியும்.
அதேபோல் பல தசாப்த்தங்களாக நமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து வென்றுவரும் YAMAHA விற்பனை நாமம் நகரம் மற்றும் கிராமங்களின் மூலை முடுக்குகளில் தமது நாமத்தை நிலைநாட்டியுள்ளமை பகிரங்கமான யதார்த்தமாகும்.
YAMAHA FZS (Rear Disk) சிறப்புத்தன்மை
150CC அணிவகுப்பு விற்பனைச் சந்தையின் முன்னணியில் திகழும் YAMAHA FZ மோட்டார் சைக்கிள் வகைகளின் புத்தம் புதிய YAMAHA FZS (Rear Disk) மோட்டார் சைக்கிளின் சிறப்பம்சம் யாதெனில் 220 mm Disk Break அம்சத்துடன் விற்பனை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனால், எந்தவொரு வேகத்திலும் இதன் கட்டுப்பாட்டை சிறப்பாக கையாளும் ஆற்றல் மற்ற மோட்டார் சைக்கிள்களை விட FZ அணிவகுப்பில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
Ray ZR Rally ஸ்கூட்டர்
Ray ZR Rally கவர்ச்சிகரமான ஸ்கூட்டர் இலங்கையின் ஸ்கூட்டர் பிரியர்களை கவரும் வேகமான ஸ்கூட்டராக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இலக்குகளை அடைய முயற்சிக்கும் இளைஞர்களின் குறிக்கோளை இலகுவாக அடைவதற்கு RAY ZR Rally உங்களுக்கு உதவுகிறது.
ஆற்றல்மிக்க இளைஞர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள Ray ZR Rally ஸ்கூட்டர், Air-cooled 4-stroke, SOHC, 2-valve BLUE CORE தொழில்நுட்பத்திலான என்ஜினைக் கொண்டுள்ளது.
8 hours ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 Jul 2025