2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ZTE திறன்பேசிகள் இலங்கையில் அறிமுகம்

S.Sekar   / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ZTE Blade திறன்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. தாம் செலுத்தும் பணத்துக்கு உயர் பெறுமதியை எதிர்பார்க்கும் இலங்கையின் நுகர்வோருக்கு மிகவும் உகந்த விலையிலமைந்த தெரிவுகளில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வர்த்தக நாமத் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் பண இருப்புக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருக்கும் நிலையில், ZTE Blade தொலைபேசிகளினூடாக குறித்த புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலமைந்த கையடக்க தொலைபேசிகளுக்கு நிகரான வினைத்திறன், சகாயமான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன், இந்த சாதனங்கள் கண்கவர் வகையில் அமைந்திருப்பதுடன், சகல தினசரி தேவைகளையும் நிவர்த்தி செய்வதாகவும் அமைந்திருக்கும். ZTE Blade தெரிவில் A31, A5 2020 மற்றும் A51 ஆகியன அடங்கியுள்ளன. நடுத்தரளவு விலையிலமைந்த கவர்ச்சிகரமான தெரிவுகளில் சகாயமான விலையில் இவை அமைந்துள்ளன.

32GB தரவு சேகரித்து வைக்கும் இடவசதியுடன், 2GB RAM வசதியைக் கொண்ட ZTE Blade A31 என்பது இலங்கையில் காணப்படும் மிகவும் சகாயமான திறன்பேசிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. 5.45-அங்குல 720p திரையை வழங்குவதுடன், 8MP பிரதான கமராவுடன், 5MP முன்புற கமராவையும் கொண்டுள்ளது.

ZTE Blade A5 2020 இனால், 32GB தரவு சேகரித்து வைக்கும் இடவசதி வழங்கப்படுவதுடன், 2GB RAM வசதி வழங்கப்படுகின்றது. பச்சை, கறுப்பு மற்றும் நீலம் ஆகிய வர்ணங்களில் காணப்படும் இந்த கண்கவர் திறன்பேசி, 6 – அங்குல 720p டிஸ்பிளேயை கொண்டுள்ளது. 13MP மற்றும் 2MP இரட்டை கமராக்களுடன், 8MP முன்புற கமராவையும் கொண்டுள்ளது. தினசரி செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்ப்போருக்கு இந்த சாதனம் சிறந்த தெரிவாக அமைந்திருப்பதுடன், சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு உகந்ததாகவும் அமைந்துள்ளது.

பாரிய திரைகளை விரும்புவோருக்காக கண்கவர் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ZTE Blade A51 இனால் உங்களுக்கு 32GB தரவு சேகரிப்பு வசதி மற்றும் 2GB RAM வசதி வழங்கப்படுவதுடன், கண்கவர் 6.5 அங்குல 720p டிஸ்பிளேயும் காணப்படும். இவற்றுடன், 13MP மற்றும் 2MP இரட்டை கமராக்களுடன், 5MP முன்புற கமராவும் காணப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .