2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Acer அறிமுகப்படுத்தும் நோட்புக் மற்றும் டெப்லட்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நெகிழ்ச்சித் தன்மையுள்ள ஒரேயொரு உபகரணத்திலேயே 'நோட்புக்' மற்றும் 'டெப்லட்' என இருவகை பயன்பாட்டை (2-in-1) வழங்கும் Acer Aspire Switch 10 உற்பத்தியை Acer நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இச் சாதனமானது நான்கு வடிவங்களிலான - தொடுகை, டைப் செய்தல், பார்த்தல் வசதியையும் எந்நேரத்திலும் பகிர்ந்து கொள்ளும் (Sharing) வசதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரிய அளவிலான வர்த்தகர்கள் வரை அனைத்து வயதுப் பிரிவினரையும் நோக்கங்களையும் மனதில் கொண்டு Acer Aspire Switch 10 என்ற நேர்த்தியான இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. Acer Aspire Switch 10 ஆனது, உங்கள் கைகளில் இருக்க இது மிகப் பொருத்தமான சாதனமாகும். பாவனையாளர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களை தொடர்பில் வைத்திருக்க இது உதவி புரிகின்றது. 

கல்வி கற்பதற்கும், விளையாடுவதற்கும் ஒரு உபகரணம் தேவையாகவுள்ள மாணவர்கள் தொடக்கம், பல்-தொழிற்பாட்டு முறைமையிலான பணிகளையும் அதேபோல் இனிவரும் சிறப்பாக காலத்தின் தொடர்பில் இணைந்திருக்க தேவையாக இருக்கும் வணிகம்சார் பயணிகள் வரை எந்த இடத்திற்கும் Acer Aspire Switch 10 மிகப் பொருத்தமாக அமைகின்றது. நோட்புக், பேட், காட்சித்திரை (டிஸ்பிளே) மற்றும்  கூடார வடிவம் (டென்ட்) என நான்கு விதத்திலான பயன்பாட்டு வசதியை இது அளிக்கின்றது. 

ஒரு நோட்புக் என்ற வகையில், இது மிக விசாலமான 'கீபோட்' (விசைப்பலகை) மற்றும் சௌகரியமான டைப் செய்தலுக்கும் செயற்றிறன் வாய்ந்த பணிக்கும் இடமளிக்கும் துல்லியமான டச்பேட் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட ஒரு முழுமையான செயலாற்றலுள்ள நோட்புக்காக காணப்படுகின்றது. ஒரு டெப்லட் சாதனம் என்ற வகையில், இணையத்தில் உலாவுதல், திரைப்படங்களை பார்த்தல் மற்றும் எல்லாவற்றையும் உங்கள் கைகளிலேயே வைத்திருக்கக் கூடிய வசதி போன்றவற்றையும் இது கொண்டுள்ளது. அதேவேளை கூட்டங்களில்  முன்னிலைப்படுத்துகை கோவை (Presentation file) போன்ற உள்ளடக்கங்களை காட்சிப்படுத்துவதற்கான அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதியை வழங்கும் ஒரு காட்சித் திரையாகவும் இது தொழிற்படுகின்றது. அத்துடன், விமானத்தின் இருக்கைப் பகுதி அல்லது பக்கவாட்டு காபி மேசை ஆகிய குறுகிய இடப்பரப்பிற்குள் வைத்து பயன்படுத்தும் விதத்தில் ஒரு கூடாரம் (tent) போன்ற வடிவத்திற்கு மாற்றியமைக்கக் கூடிய சிறப்பம்சத்தையும் Acer Aspire Switch 10 கொண்டிருக்கின்றது. 

இலங்கையில் Acer தொடரிலான கணிணிசார் கணிப்புப்பொறி உற்பத்தித் தொடர்களுக்கான அங்கீகாரம் பெற்ற ஏக விநியோகஸ்தர் என்ற அடிப்படையில் மெட்ரோபொலிட்டன் நிறுவனமானது, மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தை உள்நாட்டு நுகர்வோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய வாடிக்கையாளர்களின் விரைவாக மாறுபட்டுச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய புதிய போக்குகள் மற்றும் தொழில்நுட்பத்தை அவர்களுக்கு வழங்குவதில் Acer மற்றும் மெட்ரோபொலிட்டன் நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. புதிய உற்பத்தியான Switch 10 ஆனது, இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களதும் மாறுபடும் வாழ்க்கைப் போக்குகளில் நாளாந்தம் எழுகின்ற கணினிசார் தேவைகளை நிவர்த்தி செய்வதை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இப் புதிய மாதிரியானது Snap Hinge எனும் மேலதிக புத்தாக்க வசதியை கொண்டுள்ளமையால், இதனைப் பயன்படுத்துவோர் மேற்குறிப்பிட்ட நான்கு வடிவங்களுக்கும் இலகுவாக மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 'தாள்ப்பாள்-அற்ற' இணைப்பு மற்றும் உராய்வற்ற நிலைமாற்றலை மேற்கொள்ள வசதியாக காந்தத்தன்மையுள்ள பிரித்தெடுக்கக் கூடிய வடிவமைப்பு ஒன்றை இது கொண்டிருக்கின்றது. Acer Aspire Switch 10 ஆனது சந்தையிலுள்ள மிகவும் மெல்லிய 2-in-1 சாதனங்களுள் ஒன்றாக காணப்படுகின்றது. டெப்லட் வடிவ முறையில் இருக்கும் போது இது 8.9 மில்லிமீற்றர் இற்கும் மெல்லிய, கீபோட் இணைக்கப்பட்டிருக்கும் முறையின் போது 20.2 மில்லிமீற்றராக இது காணப்படும். டெப்லட்டாக மட்டும் இருக்கின்ற நிலையில் மிகக் குறைந்த 590 கிராம் நிறையுடையதாகவும் டெப்லட் மற்றும் கீபோட் இணைந்திருக்கையில் 1.17 கிலோகிராம் நிறையுடையதாகவும் இருக்கும். எனவே மிகவும் பாரம் குறைந்ததும் மெல்லியதுமான இவ் வடிவமைப்பு சிறப்பான ஒரு பயண வழித்துணை சாதனமாக அமையும். 

IPS தொழில்நுட்பத்துடனான 10.1 அங்குல திரையானது 178 பாகை வரையான பரந்த பார்வைக் கோணத்தை வழங்குவதுடன் அற்புதமான வர்ணங்களையும் தருகின்றது. இதிலுள்ள Zero Air Gap தொழில்நுட்பமானது மிகவும் உயிரோட்டமுள்ள, செயல்விரைவான  புகைப்படங்களை வழங்குகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X