2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

AIA காப்புறுதி நிறுவனம் தனது வர்த்தக செயற்பாடுகளை இரண்டாக பிரிக்க திட்டம்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தனது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் AIA காப்புறுதி நிறுவனம், தனது வர்த்தக செயற்பாடுகளை ஆயுள் காப்புறுதி மற்றும் பொது காப்புறுதி என இரு பிரிவுகளாக பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2014ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த பிரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது நிறுவனம், காப்புறுதி நிறுவனங்களுக்கான ஒழுங்கப்படுத்தல் தேவைப்பாட்டுக்கு அமைவாக இந்த பிரிவுகள் இரண்டாக பிரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று உள்ளவாறான பொது காப்புறுதியின் நிகர சொத்துப் பெறுமதி 1.89 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த பெறுமதியை 2.40 பில்லியன் ரூபாவை விட அதிகரிக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .