2026 மே 06, புதன்கிழமை

AMWஇன் சிறந்த 30 ரிடிரெடிங் விநியோகஸ்தர் மாநாடு 2013

A.P.Mathan   / 2014 மே 26 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் கூட்டாண்மைத் துறையில் முன்னோடியாக திகழும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் நிறுவனத்தின் ரிடிரெடிங் டயர் பிரிவின் வருடாந்தம் சிறந்த 30 விநியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல் மாநாடு அண்மையில் மவுன்ட்லேவ்னியா ஹோட்டலில் இரு தினங்களாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், ரிடிரெடிங் துறையைச் சேர்ந்த சிறந்த 30 விநியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக AMW குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான சமந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இவருடன் நிறுவனத்தின் பணிப்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட விநியோகத்தர்களிலிருந்து 30 விநியோகத்தர்கள் வரை தமது குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தனர். இவ்வாண்டு நிகழ்வின் தொனிப்பொருளாக '(அபி எக்கட) – நாம் ஒன்றாக – (We are One)' என்பது அமைந்திருந்தது.

2013 ஆண்டுக்கான சிறந்த டயர் விநியோகத்தருக்கான விருதை கம்பஹா காமினி டயர் டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காமினி லொகுபாலசூரிய பெற்றிருந்தார். இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே கண்டி, சுபிரி டயர் ஹவுஸ் கித்சிறி பண்டார மற்றும் வீரகெட்டிய ஷானிகா டயர் ஹவுஸ் ஷாந்த பிரேமதிலக ஆகியோர் பெற்றிருந்தனர். இவர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகள், பணப்பரிசுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் போன்றன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

AMW விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ்.ரத்நாயக்க வெற்றியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், 2013 ஆம் ஆண்டு என்பது நிறுவனத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக விசேடத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது என குறிப்பிட்டார்.

'எமது டயர் ரிடிரெடிங் பிரிவு கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்களவு விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. எனவே, எமது சந்தை பங்கும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தது. 2013 இல், AMW நிறுவனத்தின் மூலம், புதிய தயாரிப்புகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. மேலும், புதிய விற்பனை ஊக்குவிப்பு பிரசார செயற்திட்டத்தையும் எம்மால் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்ய முடிந்திருந்தது. இதுவும் எமது டயர் ரிடிரெடிங் பிரிவின் விற்பனை அதிகரிப்புக்கு கூடுதல் பங்களிப்பை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது' என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 'மற்றுமொரு செயற்பாடாக, கண்டி நகரில் பிராந்திய விநியோக நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கப்பட்டதும், OTR டயர் பழுதுபார்ப்பு தொழிற்சாலை ஒன்றை களுத்துறையில் ஸ்தாபிப்பிக்கட்டமை போன்றவற்றின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். எமது தொனிப்பொருளான 'அபி எக்கட – நாம் ஒன்றாக - We are One' என்பதற்கு அமைவாக சகல விநியோகத்தர்களும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை மேலும் உறுதியடையச் செய்ய தமது பங்களிப்பை வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

'கடந்த ஆண்டில் 15 விநியோகத்தர்களின் மூலம் முச்சக்கர வண்டிகளுக்கான Trimax டயர் வகைகளையும், ட்ராக்டர்களுக்கான Farmax 600x12 டயர்களையும் AMW ஊக்குவித்திருந்தது. இந்த டயர்களின் விற்பனையும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. உள்நாட்டு சந்தை பாவனைக்காக Solimax ‘Solid Tyre’ வகைகளும் பயன்படுத்தப்படுகிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

AMW நிறுவனத்தின் உற்பத்தி பணிப்பாளர் புஷ்பிக ஜயதீர கருத்து தெரிவிக்கையில், 'AMW இன் வருடாந்த விநியோகத்தர் ஒன்றுகூடல் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் என்பது, சகல டயர் விற்பனை விநியோகத்தர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. இதன் மூலம், டயர் விநியோகத்தர்களின் குடும்பத்தாரை வருடம் ஒன்றில் ஒரு தடவை ஒன்றுகூடி மகிழ்ச்சியடைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது'.

'எனவே நாம் இந்த நிகழ்வுக்கு பசுமையை சேர்க்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் பல புதிய விடயங்களை உள்ளடக்குகிறோம். இந்த டயர் விநியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் வெளிப்பாட்டின் காரணமாக, ரிடிரெடிங் டயர்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்களவு விற்பனை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. தனது சேவைகளை எதிர்வரும் காலங்களில் மேம்படுத்தி விஸ்தரிப்பதற்கு AMW திட்டமிட்டுள்ளதுடன், டயர் முகவர்களின் குடும்பத்தார் பலரையும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

AMW குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான சமந்த ராஜபக்ஷ நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, ரிடிரெடிங் டயர் விநியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடன் ஒன்றிணைந்து செயலாற்றுவது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். AMW விற்பனை செயற்பாடுகளுக்கு இந்த விநியோகத்தர்கள் குறிப்பிடத்தக்களவு வலுச் சேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார். நல் அபிப்பிராயம் மற்றும் 'உறவு என்பது நீண்ட தூரம் பயணிக்கும்' என ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

AMW ரிடிரெடிங் டயர் வர்த்தக நாமங்களான Marathon DAG, Marathon Radial, Marathon High-Miler, OTR மற்றும் a-DAG போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்தவொரு ரிம் அளவுக்கும் பொருந்தும் வகையிலான டயர்களை தயாரிப்பதில் நிபுணத்துவத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது. Vacu-lug மற்றும் Die-Hard எனும் விசேடத்துவம் வாய்ந்த உற்பத்தி செயன்முறைகளை பின்பற்றி இலங்கையில் ரிடிரெட் டயர்களை உற்பத்தி செய்யும் ஆற்றலை கொண்ட ஒரே நிறுவனமாக AMW திகழ்கிறது.

களுத்துறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதியில் இரு பெரும் தொழிற்சாலைகளை AMW கொண்டுள்ளது. சகல உற்பத்திகளுக்கும் ISO 9001-2008 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சூழல் பாதுகாப்பு தரச் சான்றான 14001-2004 என்பதும் வழங்கப்பட்டுள்ளது.

AMW என்பது 70 ஆண்டு காலமாக தனது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிறுவனம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பல்தேசிய குழுமமான Al-Futtaim குழுமத்தின் முழுமையான உரிமையை கொண்ட அங்கத்துவ கம்பனியாகும். Al-Futtaim குழுமம் என்பது, ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக, தொழிற்துறைசார் மற்றும் சேவைகளை நடவடிக்கைகளை வாகனங்கள், இலத்திரனியல், காப்புறுதி, சேவைகள், றியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு செயற்பாடுகளின் மூலம் வழங்கி வருகிறது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .