2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

AMW MARATHON DAG SUPIRI CHANCE

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் கூட்டாண்மைத் துறையின் முன்னோடியாக திகழும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) முன்னெடுத்திருந்த தனது 'Marathon DAG Supiri Chance' எனும் ஊக்குவிப்பு திட்டத்துக்கு அமைய பரிசுகளை விநியோகித்திருந்தது. இந்த ஊக்குவிப்புத் திட்டம் கம்பனியின் ரிடிரெடிங்  டயர் பிரிவின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த பரிசுகள் வழங்கும் நிகழ்வு மவுன்ட் லேவ்னியா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக AMW குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சமந்த ராஜபக்ஷ பங்குபற்றியிருந்தார்.

இந்த 'Marathon DAG Supiri Chance' ஊக்குவிப்புத்திட்டத்தின் முதலாம் பரிசான பியாஜியோ பெற்றோல் முச்சக்கர வண்டி, கண்டி, சுபிரி டயர் ஹவுஸ் (பிரைவேற்) லிமிடெட்டின் உரிமையாளர் கித்சிறி பண்டார பெற்றிருந்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளான Yamaha SZX மோட்டார் சைக்கிள் மற்றும் DELL laptop கணனி ஆகியன சிலாபம் சிங்க டயர் சென்ரர் உரிமையாளர் ஜே எம் டி ஜுவந்த நிஷாகர மற்றும் ஹெட்டிபொல டில்ஷான் டயர் ஹவுஸ் உரிமையாளர்  பி ஏ பி கே பண்டிதரட்ன ஆகியோர் பெற்றிருந்தனர். மேலும், தங்க நாணயங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் போன்றனவும் ஆறுதல் பரிசுகளாக வழங்கப்பட்டிருந்தன.

'Marathon DAG Supiri Chance' ஊக்குவிப்புத் திட்டம் என்பது, 2013 நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 2014 மார்ச் மாதம் 01ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்த திட்டத்தின் நோக்கம், Marathon DAG டயர் விநியோகத்தர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது. ‘MARATHON DAG’ procure டயர் என்பது 2013 ஆம் ஆண்டில் AMW மூலம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ரிடிரெடிங் டயர் விற்பனை அளவுகள் கணக்கில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் விநியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

AMW இன் ரிடிரெடிங் டயர் பிரிவு என்பது, 2013 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

AMW இன் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ். ரத்நாயக்க 'Marathon DAG Supiri Chance' குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த ஊக்குவிப்புத் திட்டம் Marathon DAG மற்றும் ஏனைய ரிடிரெடிங் டயர் வர்த்தக நாமங்களின் விற்பனையை முன்நோக்கி கொண்டு செல்லும் நோக்கத்துடன் அறிமுகம் செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

'Marathon DAG டயர் என்பது குறுகிய காலப்பகுதியில் சந்தையில் சிறந்த மதிப்பை பெற்றுள்ளது. இலகு ரக ட்ரக் வகைகளுக்கு இவை மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளன. ஏனெனில் இந்த டயரில் மேலதிக பற்றிப்பிடிக்கும் ஆற்றல் காணப்படுகின்றன. சிக்கனமான விலையில் இந்த டயரை கொள்வனவு செய்ய முடியும். மேலும், Marathon DAG மூலம் மேலதிக ஆயுள் காலம் உறுதி செய்யப்படுகிறது. கம்பனி மற்றும் விநியோகத்தர்களிடையிலான உறவு என்பது உறுதியாக காணப்படுகின்றமை சந்தையில் குறுகிய காலப்பகுதியில் உறுதியான வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இன்று நாம் எமது ரிடிரெடிங் டயர் விநியோகத்தர்களை கௌரவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆண்டு முழுவதும், நாம் எமது விநியோகத்தர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் மகிழ்விப்பதற்காக வௌ;வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். 'Marathon DAG Supiri Chance' ஊக்குவிப்பு திட்டம் என்பது இந்த நடவடிக்கைகளில் ஒரு அங்கமாகும். எமது ரிடிரெடிங் டயர் விநியோகத்தர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களின் அனுகூலத்தை கருத்தில் கொண்டு, எதிர்வரும் மாதங்களில் நாம் மேலும் பல ஊக்குவிப்புத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

AMW மூலம் புகழ் பெற்ற ரிடிரெடிங் டயர் வர்த்தக நாமங்களான Marathon DAG, Marathon Radial, Marathon High-Miler, OTR மற்றும் aDAG போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், எந்தவொரு ரிம் அளவுக்கும் ஏற்ற வகையில் டயர்களை வடிவமைக்கும் நுட்பத்தை கம்பனி நன்கு அறிந்து தனது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. Vacu-lug மற்றும் Die-Hard எனும் விசேடமான உற்பத்தி வழிமுறைகளுக்கமைய தனது ரிடிரெட் டயர்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் ஒரே நிறுவனமாக AMW திகழ்கிறது. 

களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதியில் இரு பெரும் தொழிற்சாலைகளை AMW கொண்டு;ள்ளது. சகல உற்பத்திகளுக்கும் ISO 9001-2008 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சூழல் பாதுகாப்பு தரச் சான்றான 14001-2004 என்பதும் வழங்கப்பட்டுள்ளது.

AMW என்பது 65 ஆண்டு காலமாக தனது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிறுவனம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பல்தேசிய குழுமமான Al-Futtaim குழுமத்தின் முழுமையான உரிமையை கொண்ட அங்கத்துவ கம்பனியாகும். Al-Futtaim குழுமம் என்பது, ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக, தொழிற்துறைசார் மற்றும் சேவைகளை நடவடிக்கைகளை வாகனங்கள், இலத்திரனியல், காப்புறுதி, சேவைகள், றியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு செயற்பாடுகளின் மூலம் வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X