.jpg)
அண்மையில் ஹொங்கொங் நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கூட்டணி (APICTA) நிகழ்வில் SLIIT கல்வியகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் இரு மெரிட் விருதுகளை வென்று இலங்கைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். SLIIT கல்வியகத்தின் மாணவர்கள் தங்களது புத்தாக்க மற்றும் வணிக ரீதியாக நிலைத்திருக்கக் கூடிய திட்டங்களுடன் பிரகாசித்தனர்.
அண்மையில் இடம்பெற்ற தேசிய தரச்சிறப்பு ICT விருதுகள் (NBQSA) வழங்கும் நிகழ்வில் மூன்றாம் நிலை மாணவர் பிரிவின் கீழ் தங்க விருதை வென்றெடுத்த கனின்து நாணயக்கார இந் நிகழ்வில் தமது 'iHelmet' திட்டத்திற்கு மெரிட் விருதினை வென்றார். மேலும் இந் நிகழ்வில் பிரமாதி அத்தபத்து ஆராச்சி, மித்ரா மாயாதுன்னே, ஜயருவன் ரூபசிங்க மற்றும் தினேத் குறே ஆகியோர் மூன்றாம் நிலை மாணவர் பிரிவின் கீழ் 'Panacea's Jacket' திட்டத்திற்கு மெரிட் விருதினை தனதாக்கிக் கொண்டனர்.
ICT புதிய கண்டுபிடிப்புகளில் தமது திறன்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கான அடித்தளத்தை அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைத்துக்கொடுக்கும் பிராந்தியத்தின் ICT துறை நாட்காட்டியின் மிக முக்கிய நிகழ்வாக APICTA அமைந்துள்ளது. இந்த வருட போட்டியில் அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன.
கடுமையான மதிப்பீடுகள் ஆனது, SLIIT மாணவர்களுக்கு பிராந்திய ICT முன்னேற்றங்கள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திகளுக்கு தமது பங்களிப்பினை வழங்குவதற்கு வழிவகுத்துள்ளது.
.jpg)