.jpg)
PepsiCo மற்றும் அதன் வர்த்தக நாம பங்காளரான வருண் பெவரேஜஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட் ஆகியன இணைந்து, இலங்கையில் Aquafina குடிநீர் போத்தல்களை அறிமுகம் செய்துள்ளன. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தெரிவுகளில் Aquafina என்பது புகழ்பெற்ற நாமமாக திகழ்கிறது. அமெரிக்கா உள்ளடங்கலாக 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது விற்பனையாகின்றது.
நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த Aquafina குடிநீர் போத்தல்கள், 20 லீற்றர் மொத்த போத்தல்கள் மற்றும் 500 மி.லீ, 1 லீ, மற்றும் 1.5 லீ. போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. இந்த அறிமுக செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் உறுதியான நுகர்வோர் மற்றும் விற்பனை சந்தைப்படுத்தல் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
PepsiCo இந்தியாவின் இலங்கைக்கான முகாமையாளர் அன்கித் மஹாஜான் கருத்து தெரிவிக்கையில், 'எமது ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தை என்பது வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த அறிமுகம் அமைந்திருக்கும். இலங்கையின் உணவு சேவைகளை வழங்கும் பகுதிகளின் நிலையை கருத்தில் கொள்ளும் போது, மொத்த குடிநீர் என்பது எமது தயாரிப்புகளுக்கு மேலதிக அம்சமாக அமைந்துள்ளது. Aquafina வின் உற்பத்தி முறை என்பது, ஏழு தடவைகள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் போத்தலில் அடைக்கப்படுகிறது. நுகர்வோரின் நீண்ட கால தேவையாக காணப்படும தூய நீருக்கான கேள்வியை சகாய விலையில், நம்பிக்கையுடன் நிவர்த்தி செய்வது என்பது PepsiCo வின் குறிக்கோளாக அமைந்துள்ளது' என்றார்.
வருண் பெவரேஜஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அஜய் பார்தியா கருத்து தெரிவிக்கையில், 'நுகர்வோர்கள் மற்றும விற்பனை நிலையங்களுக்கு நாம் விநியோகித்து வரும் தயாரிப்புகளை Aquafina வின் அறிமுகத்துடன் மேலும் விஸ்தரிக்க முடிந்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதன் விசேடமாக உள்ளம்சங்கள், ஏழு படிமுறை தூய்மைபடுத்தும் செயன்முறை போன்றவற்றுடன், சர்வதேச வர்த்தக நாம தரம் மற்றும் பரந்த விநியோகம் என்பவற்றுடன் Aquafina கொண்டுள்ள பிரத்தியேகமான ஏழு படிமுறை தூய்மையாக்கல் செயற்பாடு, அதன் சர்வதேச வர்த்தக நாமத்துக்கான நற்பெயர் மற்றும் பரந்த விநியோகம் போன்றன குறிப்பிடத்தக்க விடயங்களாக அமைந்துள்ளன. இலங்கையின் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தில் முன்னணி வர்த்தக நாமமாக திகழக்கூடிய சகல அம்சங்களையும் Aquafina கொண்டுள்ளது. எமது உற்பத்தி, விநியோகம் மற்றும் குளிர்மையாக்கல் உட்கட்டமைப்பு வசதிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான, தூய மற்றும் சிறந்த குளிர்மையான நீரை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
.jpg)