2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'Around the Pearl' சைக்கிள் ஓட்டப்போட்டிக்கு ஜனசக்தி அனுசரணை

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது, பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 'Around the Pearl' எனும் 10 நாள் சைக்கிள் ஓட்டப்போட்டிக்கு அனுசரணை வழங்கியிருந்தது. பெருமூளை வாதம் (Cerebral palsy) என்பது பொதுவாக குழந்தைகளை உடல் ரீதியாக தாக்கும் ஓர் நோயாகும். இந் நோயானது மூளையின் செயற்பாட்டினை பாதிப்படையச் செய்கிறது.

ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை ஊயட புசழரி இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும்/ முகாமைத்துவ பணிப்பாளருமான அஜித் பெர்னாண்டோவின் தலைமையின் கீழ் 12 தொழிற்துறை நிபுணர்களின் பங்குபற்றலுடன் 1400 கி.மீற்றர் சைக்கிள் ஓட்டப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கைத் தீவுக் கரையோரத்தில் 1400 கிலோ மீற்றர்களை முழுமையாக பயணித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் முடிவுக்கு வந்தது. 1000 சக்கர நாற்காலிகளை பெற்றுக் கொடுக்கும் குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்திற்கு www.aroundthepearl.lk எனும் இணையத்தளம் ஊடாக ஆதரவு வழங்க முடியும்.

'இலங்கையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான தேவை காணப்படுவதுடன், இந் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தைக்கு நாற்காலி ஒன்றை வழங்குதலானது மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதாக அமையும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள பெரும்பாலான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களின் மூலம் சமூகத்தின் பார்வையிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். இக் குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு பங்களிப்பை வழங்கும் வகையிலேயே 'Around the Pearl' எனும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது' என ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.

வீல்ஸ் ஃபோர் வீல்ஸ் (Wheels for Wheels) இனால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியே Around the Pearl செயற்திட்டமாகும். இலங்கையில் சைக்கிள் ஓட்டுவதனை வெறும் மாற்று போக்குவரத்து முறையாக மாத்திரமன்றி, வீதி பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் குறிக்கோளைக் கொண்ட இத் திட்டத்தை செரிபரல் பேல்சி லங்கா நிதியம் (CPLF) மற்றும் WrooM ஏற்பாடு செய்திருந்தது.

'12 தொழிற்துறை நிபுணர்களை கொண்ட சைக்கிள் ஓட்டப்போட்டி குழாமானது தேசத்தைச் சுற்றி வருவதற்கான சவாலை எதிர்கொண்டுள்ளதுடன், பெருமூளை வாதத்திற்கு நிதி சேகரிக்கும் குறிக்கோளினை வெற்றிகரமாக பூர்த்தி செய்யவுள்ளது. இலங்கையில் பெருமூளை வாதத்தினால் பாதிப்புற்றிருக்கும் பல குழந்தைகளுக்கு தமது வாழ்வை மேம்படுத்தக்கூடிய 1000 சக்கர நாற்காலிகளை சேகரிக்கும் திட்டத்திற்கு எமக்கு ஆதரவளித்த ஜனசக்தி நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையில் இந் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட பல குடும்பங்கள் உள்ள நிலையில், சாதாரண சக்கர நாற்காலியானது அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதுடன், சிறந்த எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும்' என அஜித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த சைக்கிளோட்ட வீரர்கள் தீவு முழுவதும் பயணிக்கவுள்ளதுடன், இப் பயணத்தில் கொழும்பிலிருந்து காலி, நீர்கொழும்பு, மிரிஸ்ஸ, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.

ஜனசக்தி நிறுவனம் சமூகத்திற்கு சேவையாற்றும் அதன் அர்ப்பணிப்பின் ஓர் அங்கமாக, இளம் கிராமிய மெய்வல்லுனர் போட்டிக்கு அனுசரணையாகவும், விசேட சிறுநீரக பரிசோதனை திட்டங்கள், டெங்கு ஒழிப்பு திட்டங்கள் மற்றும் கண் பராமரிப்பு போன்ற திட்டங்களை முன்னெடுத்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X