
தேசிய விவசாய வர்த்தக சபையின் மூலம் 6 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய விவசாய வணிக விருது 2013' நிகழ்வில் சமபோஷ உற்பத்தி செய்யும் சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனமானது தங்க விருது உள்ளடங்கலாக இரு விருதுகளை வென்றுள்ளது. அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக விவசாய அமைச்சரனான மகிந்த யாபா அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். விவசாயத்துறையின் அபிவிருத்திக்கான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில் தேசிய மட்டத்தில் மூன்றாவது ஸ்தானமான வெண்கல விருதையும், மிகப் பாரிய உற்பத்தி செயற்பாடுகளுக்காக தங்க விருதையும் வென்றுள்ளது.
தேசிய விவசாய வர்த்தக சபையானது இலங்கையின் விவசாயத்துறைக்கு வியாபாரிகள் மூலம் ஆற்றப்படுகின்ற சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தி விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகளுக்கு சப்ளையர்கள், சேவைகள், உற்பத்திகள், உற்பத்தி செயற்பாடுகள், சந்தை உட்பட பல விடயங்களை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டன. மேலும் வணிக நோக்கு, நிதி முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் அடிப்படையில் விருதுகள் தீர்மானிக்கப்பட்டன.
இந்த விருதுகள் குறித்து பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'விவசாய வர்த்தக துறையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக நாம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். பிளென்டி ஃபூட்ஸ் குழுவினர் தங்கம் மற்றும் வெண்கல விருதுகளை வென்றமையானது மீண்டுமொரு தடவை இத் துறைக்கான நிறுவனத்தின் சிறந்த பங்களிப்பும், எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளின் உயர் தரமும் நிரூபனமாகின்றது' என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 'இலங்கையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் முன்னணி தானிய ஆகாரமானது 100% தேசிய மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. கிராமிய விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் 12,000 க்கும் அதிகமான விவசாயிகளின் கடின உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை வழங்கும் வகையிலான பின் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தை முன்னெடுத்து வருகிறது' என்றார்.
இலங்கையில் தானிய ஆகாரங்களை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய நிறுவனமாக பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமாக சமபோஷ திகழ்கிறது. மேலும் இந் நிறுவனம் 4GB, On the Go போன்ற தயாரிப்புகளையும் உற்பத்தி செய்து வருகிறது. உற்பத்தி செயற்பாடுகளின் போது மனித தொடுகையின்றி பாதுகாப்பான முறையில் இயந்திரங்களின் துணையுடன் உற்பத்தி செய்யப்படும் தானிய ஆகாரங்களின் உயர் தரத்தை உறுதிப்படுத்தி SLS, ISO, HACCP, GMP ஆகிய தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தானிய ஆகார தயாரிப்புகள் மத்தியில் இந்த தரச் சான்றிதழ்களை பெற்ற ஒரேயொரு தயாரிப்பாக பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பாக சமபோஷ விளங்குகிறது.