2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

CDB இன் 'சிசு திரி'

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் (CDB) நிறுவனம், கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி டவுன்ஹோல் தியேட்டரில் இடம்பெற்ற 7ஆவது சிசு திரி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 58 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான கலாசூரி சதிஷ்சந்திர எதிரிசிங்க மற்றும்  கௌரவ விருந்தினராக CDB நிறுவனத்தின் தலைவர் ஹர்சேல் குணவர்தன ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் இந்நிகழ்வில் பெற்றோர்கள், CDB நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உயர் சித்தியடையும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நோக்கில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த 'சிசு திரி' புலமைப்பரிசில் திட்டத்தில் 12 மில்லியன் ரூபா முதலீட்டினை CDB மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக 278 மாணவர்களுக்கு இந் நிறுவனம் ஆதரவளித்துள்ளது.

'சிசு திரி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளில், நிதி நெருக்கடிகள் எதுவுமின்றி தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய உதவிகளை பல்வேறு மாணவர்களுக்கு வழங்க எம்மால் முடிந்தது. எமது புலமைப்பரிசில்களை பெற்ற பெரும்பாலானோர் தமது உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் ரீதியில், வளமான எதிர்காலத்திற்கு பங்களிப்பும், தேசத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு தேவையான ஆதரவினையும் வழங்கி வருகின்றோம்' என CDB நிறுவனத்தின் தலைவர் ஹர்சேல் குணவர்தன தெரிவித்தார்.

இத் திட்டத்தின் மூலம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்களுக்கு 50,000 ரூபா படி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் வரை ஐந்து ஆண்டுகளுக்கு (வருடாந்தம் ரூ.10,000) வழங்கப்படும். அதேபோல க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் சித்தியெய்தும் மாணவர்களுக்கு தலா 30,000 ரூபா படி அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றும் வரை (வருடாந்தம் ரூ.15,000) வழங்கப்படும். CDB நிறுவனமானது நிதியுதவித் தொகையினை மாணவர்களின் கணக்கிலிடாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றமையினால் அதன் அனுகூலங்களை மாணவர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும்;.

இந் நிகழ்வில் உரையாற்றிய வெற்றியாளர்களில் ஒருவரான கம்பளை ஹெலன விஜயவர்தன பெண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜனனி உத்பலாவின் தந்தை ஜனக சுசந்த பெரேரா தெரிவித்ததாவது, 'எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதில் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அச் சுமையை குறைப்பதில் உதவிடும் வகையில் இப் புலமைப்பரிசில்களை வழங்கிய CDB இற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்' என்றார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கலாசூரி சதிஷ்சந்திர எதிரிசிங்க கருத்து தெரிவிக்கையில், 'நாளைய எதிர்காலம் குழந்தைகள் ஆகும். சமூகத்திற்கு பெரும் பங்காற்றக்கூடிய சிறந்த தலைவர்களாக வருவதற்கு தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல் வேண்டும். சிசு திரி திட்டத்துடன் சிறுவர்களுக்கு உதவிடும் CDB பாராட்டுதல்களை பெற்றுள்ளது' என மேலும் தெரிவித்தார்.

'இன்று பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் விவகாரங்கள் குறித்து மிகவும் அக்கறை செலுத்தி வருகின்றனர். குடும்ப காலாசாரத்திலிருக்கும் சந்தோஷமான குடும்பம் பன்முக திறமையான குழந்தையை உருவாக்குகிறது. எனவே குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதுடன், அவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க வேண்டியமையும் பெற்றோரின் பொறுப்பாகும்;' என மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் கிராமிய மற்றும் நகர்ப்புற சமூகத்தினருக்கு தமது சேவைகளை வழங்கி வரும் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனமான CDB ஆனது, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் 59 கிளைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற CDB எதிர்பார்த்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X