
Clarion இன்டர்நஷனல் என்பது மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலங்கையின் 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சக்தியினை சேமிப்பதற்கான சேவைகளை வழங்கி, மின் சக்தியினை சேமிக்கும் அமைப்புகளையும், உபகரணங்களையும் வழங்கி வருகிறது. குறித்த நிறுவனங்களுக்கு, தமது உற்பத்தி செயற்பாடுகளின் போது மில்லியன் கணக்கான ரூபாக்களை சேமித்துக் கொள்ளவும் பங்களிப்பு செய்திருந்தது. நூறுசதவீதம், இலங்கை நிறுவனம் எனும் வகையில், Clarion இன்டர்நஷனல் (www.clarionsrilanka.com) தற்போது தனது சிறந்த சேவையினை விஸ்தரிக்கும் வகையில் புதிய LED மின்குமிழ்கள் மற்றும் solar PV அமைப்புகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய தெரிவுகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற INCO 2014 கண்காட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
Clarion இன்டர்நஷனல் இலங்கையில் தனது சேவைகளை பல தசாப்த காலங்களாக பயன்படுத்தி வரும் நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மேலும் அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்த புதிய தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது.
Clarion இன்டர்நஷனல் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி விஜித ஜயதுங்க HIPPO LED மின்குமிழ்கள் மற்றும் solar PV அமைப்புகளின் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், நாம் வழங்கி வரும் சேவைகள் பாவனையாளர்களின் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், நம்பிக்கையையும் வென்றுள்ளது என்றார்.
'1000இற்கும் அதிகமான முன்னணி நிறுவனங்களுக்கு மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக தனது சேவைகளை வழங்கிவரும் இந்நிறுவனம், சக்தி, வலு சேமிப்பிற்கான சேவைகளை வழங்குவதன் மூலம், குறித்த நிறுவனங்களின் மின் கட்டணப்பட்டியலில் மில்லியன் கணக்கான ரூபாவை குறைத்துக் கொள்ளவும் பங்களிப்பை வழங்கியுள்ளது. Clarion இன்டர்நஷனல் மூலம் ஈட்டப்பட்டுள்ள மதிப்பு என்பது எமது புதிய தெரிவுகளின் மீது பிரதிபலிப்பை கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன். ஏனைய எந்தவொரு நிறுவனமும் தமது வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவினால் செலவீனங்களை குறைப்பதற்கு பெருமளவு பங்களிப்பு செலுத்துவதில்லை. ஆதலால் முன்னணி நிறுவனங்கள் தமது நம்பிக்கையினை எம்மீது கொண்டுள்ளன. நாம் தரத்தை பேணிவருவதுடன், விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கும் பிரதான முக்கியத்துவத்தை வழங்குகிறோம்'என மேலும் தெரிவித்தார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள HIPPO LED மின்குமிழ் மற்றும் Solar PV அமைப்புகள் என்பன உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
HIPPO LED மின்குமிழ் என்பது தென் கொரியாவில் LED மின்குமிழ்கள் சந்தையில் அதிகளவு சந்தைப் பங்கை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், இவை 35000 மணிநேரம் ஒளிரும் ஆயுட்காலத்தை கொண்டுள்ளதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. (அதாவது நாளாந்தம் 5 மணித்தியாலங்கள் வீதம், தொடர்ச்சியாக 19 வருடங்களுக்கு பயன்படுத்துவது) இந்த மின்குமிழ் உயர்மட்ட சர்வதேச தரச் சான்றிதழ்களான CE, Rohs, LOHAS, ISO 9001 மற்றும் GOST ஆகியவற்றை கொண்டுள்ளது. கொரியாவின் தரக் கட்டுப்பாட்டு அதிகார சபையின் சூழலுக்கு பாதுகாப்பானது எனும் தரச் சான்றிதழை கொண்டுள்ள ஒரே மின்குமிழ் வகையாக HIPPO LED மின்குமிழ் திகழ்கிறது.
HIPPO LED மின்குமிழ்கள் இரண்டு ஆண்டுகளுக்கான உத்தரவாதத்தை கொண்டுள்ளதுடன், வெவ்வேறு வாற்று (W) அளவுகளிலும், வடிவங்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Solar PV அமைப்புகளின் மூலம் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான வலுச்சிக்கனமான தீர்வுகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. Solar PV அமைப்புகளின் முக்கிய உள்ளம்சமான Inverter மிகப்பெரிய Inverter உற்பத்தி நிறுவனமான ஜேர்மனி நாட்டின் SMA நிறுவனத்தின் இணை நிறுவனமான Zeversola நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. Solar panel (சூரிய சேமிப்புக் கலம்) ஆனது உலகின் மிகப்பெரிய Solar water உற்பத்தி நிறுவனமான சீனாவின் Renesola நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த வருடம் நியுயோர்க் பங்குச்சந்தை பட்டியலின் படி மாபெரும் Solar அமைப்பு உற்பத்தி நிறுவனமாக Renesola திகழ்கிறது. அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களில் மிக முக்கியமாக Samsung, Saint Gobain, Canadian Solar, Hyundai மற்றும் Mitsubishi ஆகியன உள்ளடங்கியுள்ளன. மேலும், Renesola தயாரிப்புகளை பயன்படுத்தும் செயற்திட்டங்களுக்கு 17 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் அனுமதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தொழிற்துறையில் 30 வருடகாலமாக இயங்கி வருகின்றமையின் இரகசியம்
Clarion இன்டர்நஷனல் இன் பிரதான செயற்பாடுகளான சக்தி மற்றும் பணத்தை சூழலுக்கு பாதுகாப்பானதாக முறையில் சேமிப்பதாக 1986 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. மேலும் சூழலுக்கு நட்புறவான வகையில் தமது வியாபாரத்தினை வாடிக்கையாளர்களுக்கு நட்புறவான வகையில் வழங்கி வருகிறது.
1000 க்கும் அதிகமான முன்னணி வங்கிகள், அரச நிறுவனங்கள், பல்தேசிய நிறுவனங்கள், சுப்பர் மார்க்கெட் தொடர்கள், நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்கள், தனியார் மருத்துவமனைகள், ஆடைத் தொழிற்துறை, விவசாயத்துறை, பார்மசி துறை, உள்நாட்டு உணவு தொடர்கள் போன்றவற்றின் வலுச் சேமிப்புக்கு பங்களிப்புச் செய்து பல ஆயிரக்கணக்கான ரூபாவை சேமித்துக் கொள்ள உதவிய நிறுவனமாக Clarion இன்டர்நஷனல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Clarion இன்டர்நஷனல் என்பது தனது தயாரிப்புகளின் நிலையாண்மையை தக்கவைப்பது தொடர்பில் அதிகளவு கவனத்துடன் செயலாற்றி வருகிறது. இதன் காரணமாக Clarion Automation Electronic drivers (VSDs) from ABB, Switzerland, Power factor correction Capacitor and Energy Management Systems from FRACO, Germany, motors from WEG, Brazil, Surge Protections from HEKEL, Czechoslovakia and Europe, Power control components from BENEDICT, Austria, Earthing networks and Bus-bars from LUVATA, Malaysia மற்றும் Lighting protections from Franklin, France ஆகியநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட உற்பத்திகள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. விஜித ஜயதுங்க, வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் மின் கூறுகளின் பங்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் 'சுவிட்சர்லாந்தை சேர்ந்த ABB கம்பனியில் சுமார் 120,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இதன் வருடாந்த முதலீடுகள் என்பது ஒரு பில்லியன் டொலர்களாகும். ABB இல் 8000 விஞ்ஞானிகளின் அறிவு பயன்படுத்தப்படுகிறது. இது போலவே, ஜேர்மனியின் FRAKO என்பது வலு மற்றும் வலுச்சிக்கனத்துக்கு பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
திரு. ஜயதுங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,'குறைந்த தரம் வாய்ந்த LED மின்குமிழ்கள் தமது ஒளிச் செறிவினை குறுகிய காலப்பகுதியில் இழக்கும் வகையில் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு போதியளவு பெறுமதியை வழங்காது. ஆனால் Clarion இன்டர்நஷனல் விநியோகிக்கும் சாதனங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தினை சேமிக்கும் வகையில் அமைந்திருக்கும்' என தெரிவித்தார்.