2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Edexcel உயர்தர பரீட்சைகளின் இலங்கை மாணவர்கள் அதிக சித்தி

A.P.Mathan   / 2014 நவம்பர் 20 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச Edexcel உயர்தர பரீட்சைகளின் சராசரி எண்ணிக்கையை விட இலங்கை மாணவர்கள் அதிகமாக சித்தியடைவதாக பிரித்தானியாவின் Pearson Qualifications International இன் சர்வதேச பங்காண்மைகள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்கான பணிப்பாளர் David Growther அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது தெரிவித்திருந்தார். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றிருந்த Pearson Edexcel கல்வி செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.
 
'மாணவர்களின் திறமைகளை நான் பாராட்ட விரும்புகிறேன். இது சர்வதேச சராசரி எண்ணிக்கையை விட அதிகமாக காணப்படுகிறது. இலங்கை மாணவர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்' என்றார். 
 
சர்வதேச உயர்தர தகைமையை பூர்த்தி செய்த இலங்கை மாணவர்களில் 10.7 வீதமானவர்கள் A* தர சித்தியை பெற்றுள்ளனர். சர்வதேச சராசரி எண்ணிக்கை 10.2 வீதமாகும். அதுபோலவே, A தர சித்தியை பெற்ற இலங்கை மாணவர்களின் தொகை 18.1 வீதமாக அமைந்துள்ளது. சர்வதேச சராசரியை கருத்தில் கொண்டால் இது 17.4 வீதமாகும். நாட்டின் 5 பிரதான நகரங்களை உள்ளடக்கி, 5 நாட்களுக்கு இடம்பெற்ற இந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் குறித்த கருத்தை தெரிவித்திருந்தார்.
 
இந்த செயலமர்வின் போது, Asian International School இன் சஷிதர் சுரேஷ்குமார் கருத்து தெரிவிக்கையில், 'Edexcel முறை என்பது மிகவும் போட்டிகரத்தன்மை வாய்ந்ததாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது என்பதை என்னால் முழு மனதுடன் தெரிவிக்க முடியும். இணையத்தளத்தில் காணப்படும் உதவி ஆவணங்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. கடந்த கால பரீட்சை வினாத்தாள்களை பெற்றுக் கொள்வது என்பது மிகவும் எளிமையானதாகவும் அமைந்துள்ளது' என்றார்.
 
Colombo International School இன் கிம்ஹானி அபேகுணசேகர தனது கருத்தை வெளியிட்ட போது, 'உயர் தர பரீட்சையின் போது Edexcel இனால் வழங்கப்பட்டிருந்த இரு பகுதி பாடவிதானம் என்பது எனது கற்றல் செயற்பாடுகளை முறையாக வகைப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருந்தது. இதன் மூலம் என்னால் மருத்துவ கல்லூரிக்கும் இலகுவாக தெரிவாக முடிந்தது' என்றார். கிம்ஹானி அவுஸ்திரேலியாவின் New South Wales பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையில் பட்டப்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
 
கொழும்பு, Gateway School இன் நவிது சமரக்கொடி கருத்து தெரிவிக்கையில், 'Edexcel என்பது உங்கள் புத்தாக்கங்கள், சிந்தனை ஆகியவற்றை ஊக்குவித்து, தகைமைகள் மற்றும் ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ள உதவியாக அமைந்துள்ளது' என்றார். இவர் பிரித்தானியாவின் Imperial Collegeஇல் பொறியியல் கற்கையை தொடர்வதற்காக தெரிவாகியுள்ளார்.
 
இந்த நிகழ்வில் மாணவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்ததற்கு மேலாக, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமக்குரிய இடங்களை பிடித்துள்ள இதர மாணவர்கள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்த பெருமைக்குரிய பல்கலைக்ழகங்களில் Cambridge, Oxford, Warwick, Imperial College London, UCL, Columbia University, McGill University in Canada, Pennsylvania State University, Monash University in Australia மற்றும் King's College in UK போன்றன உள்ளடங்கியுள்ளன. 
 
சர்வதேச உயர்தர கற்கைகளுக்கு மேலாக Edexcel மூலமாக வெவ்வேறு BTEC தகைமைகளும் தரம் 2 முதல் தரம் 5 வரை வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்கு முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. 
 
Pearson Edexcel தகைமைகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, Edexcel அலுவலகத்துடன் 0094 11 2391175 தொடர்பு கொள்ளவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X