
அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க தொழில்சார் தொடர்பாடல்கள் சங்கத்தின் சர்வதேச தொடர்பாடல்கள் போட்டியின் கவன ஈர்ப்பு விருதுகள் நிகழ்வில் Expolanka Holdings PLC நிறுவனத்தின் 'TAGGED' 2012/2013 ஆண்டறிக்கைக்கு தங்க விருது கிடைக்கப்பெற்றுள்ளது. பல்வேறு தொழிற்துறைகள் மற்றும் வேறுபட்ட அளவுகளின் கீழான நிறுவனங்கள் மத்தியிலிருந்து இந்த சர்வதேச தொடர்பாடல்கள் போட்டிக்கு இதன் வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான நுழைவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக 12 நாடுகளைச் சார்ந்த 300 நிறுவனங்களின் மத்தியிலிருந்து கிட்டத்தட்ட 1,500 நுழைவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை மிகக் கடுமையான போட்டிக்கு வழிகோலியிருந்தது.
இவ்விருது கிடைக்கப்பெற்றமை தொடர்பில் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், வர்த்தகத் தொடர்பாடல்கள் மற்றும் வர்த்தக சமூக நலன்புரித் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான படி வீரசேகர அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் 'பெருமதிப்புமிக்க இந்த சர்வதேச விருதை வென்றமை மற்றும் உலகளாவில் ஆண்டறிக்கைகள் மத்தியில் 36ஆவது ஸ்தானத்தைப் பெற்று மிகச் சிறந்த 100 ஆண்டறிக்கைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை ஆகியவற்றையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளோம். இலங்கையிலும், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் Expo நிறுவனம் முன்னெடுத்துவருகின்ற வர்த்தகச்செயற்பாடுகளின் தரம் மற்றும் சிறப்பிற்கான உத்தரவாதத்தை உறுதிசெய்யும் வகையில் ஆண்டறிக்கையின் கருத்தாக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டறிக்கையின் கருத்தாக்கம் மற்றும் வடிவமைப்பு என்பன Copyline (Pvt) Ltd நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், Gunaratne Offset (Pvt) Ltd நிறுவனம் இதனை அச்சிட்டிருந்தது.
'கடுமையான போட்டிக்கு மத்தியில் Expolanka Holdings PLC நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான 'TAGGED' நுழைவு குறிப்பிட்ட சாதனையாக அமைந்துள்ளது. இதன் ஒட்டுமொத்தமான வேலைப்பாடு மிகச் சிறந்ததாக உள்ளதுடன், ஆகக்கூடிய 100 புள்ளிகளில் மொத்தமாக 98 புள்ளிகளை ஈட்டியிருந்தது. அதிசிறந்த பெறுபேறுகளின் காரணமாக இப்போட்டிப் பிரிவில் 'TAGGED' தங்க விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டது' என்று அமெரிக்க தொழில்சார் தொடர்பாடல்கள் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கிறிஸ்டின் கென்னடி அவர்கள் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட போட்டிப்பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தெரிவுசெய்வதற்கு அமெரிக்க தொழில்சார் தொடர்பாடல்கள் சங்கம் பல நூற்றுக்கணக்கான கடுமையான தீர்ப்பு மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்திருந்தது. நுழைவுகள் மத்தியில் நியாயமான ஒப்பீட்டுத் தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் வகையில் போட்டிப்பிரிவுகள் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. கிடைக்கப்பெறும் நுழைவு ஒன்றிற்கு பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்கும் வகையில் அமெரிக்க தொழில்சார் தொடர்பாடல்கள் சங்கத்தினால் உருவாக்கப்பட்ட தனியுரிம தீர்ப்புவழங்கல் முறைமைக்கு அமைவாக முடிவுகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன. 100 புள்ளிகள் அளவு அடிப்படையில் அனைத்துப் பிரிவுகளின் கீழும் பெறப்பட்ட புள்ளகளின் கூட்டுப்புள்ளிகள் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.
'இந்த நுழைவின் தொகுப்பு தொடர்பில் முதலில்; எழும் அபிப்பிராயம் மிகச் சிறந்ததாக உள்ளதுடன், விபரிப்பும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 'TAGGED' இனால் தொகுக்கப்பட்டுள்ள வெளிப்பார்வை வடிவமைப்பு அதிசிறப்பானதாக உள்ளதுடன், அதனுடன் இணைந்த படைப்பாக்க ஆற்றல் தனிச் சிறப்பானது. இதனைப் பயன்படுத்துபவர்கள் அதிசிறந்த மற்றும் விசேடமான பொருத்தப்பாடு மற்றும் தெளிவு ஆகியவற்றைக் காணக்ககூடியதாக உள்ளதுடன், குறிப்பிட்ட செய்தியை அதனைத் தெரிவிக்கவேண்டியவர்களுக்கு மிகச் சிறந்த விதத்தில் எடுத்துச்செல்லும் ஒரு செயற்திட்டத்தின் வெற்றியினையும் இது எடுத்துக்கூறுகின்றது' என்று கென்னடி அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தொடர்பாடல்கள் தொழிற்துறை மத்தியில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, தொழிற்துறையில் மிகச் சிறந்த நடைமுறைகள் தொடர்பில் கலந்தாலோசிக்க அனுசரணையளித்து, மிகச் சிறந்த தொடர்பாடல் திறமைகளின் வெளிப்படுத்தல்களை இனங்கண்டு உரிய அங்கீகாரம் அளிக்கும் இலக்குடன் 2001ஆம் ஆண்டில் அமெரிக்க தொழில்சார் தொடர்பாடல்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.