2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

EZY ரேசிங் அணிக்கு வலுச்சேர்க்கும் மொபில்

A.P.Mathan   / 2013 ஜூலை 08 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி மோட்டார் பந்தய அணியான EZY அணிக்கு, 2013ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ எண்ணெய் பங்காளர் அனுசரணையை வழங்க மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் முன்வந்துள்ளது. இதன் அனுசரணைக்கமைய, EZY அணிக்கு மொபில் 1 எண்ணெய்யை மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் விநியோகிக்கவுள்ளது. EZY அணியின் உரிமை நிறுனமாக இலங்கையின் முதலாவது நிபுணத்துவம் வாய்ந்த மோட்டார் நிறுவனம் எனும் பெருமையை பெற்ற EZY மோட்டார் ரேசிங் கோர்ப்பரேஷன் லிமிடெட் திகழ்கிறது. ExxonMobil எண்ணெய் வகைகளை இலங்கையில் விநியோகிக்கும் ஏக உரிமையை பெற்ற நிறுவனமாக மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் திகழ்கிறது.
 
மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் அணியின் மொபில் எண்ணெய் வகையானது சர்வதேச ரீதியில் மோட்டார் பந்தய போட்டிகளில் புகழ்பெற்ற நாமமாக திகழ்வதுடன், மோட்டார் கார் பந்தய போட்டிகளில் பல விருதுகளை இது வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
ExxonMobil என்பது சர்வதேச ரீதியில் அதிகளவு விற்பனை செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு கம்பனியாக திகழ்வதுடன், பெற்றோலியம் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
 
100 ஆண்டுகளுக்கு அதிகமான தலைமைத்துவ வரலாற்றைக் கொண்ட இந்நிறுவனம் தனது வர்த்தக கொள்கைகளை செயற்படுத்துவதற்காக கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த ஆய்வுகள், உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்வதற்காக அமைனந்த கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் போன்றன நிறுவனத்தை உயர்ந்த அடிப்படை தரங்கள் மற்றும் நிலையான அனுகூலங்களை பின்பற்றுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. 
 
மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், மெக்லாரன்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக செயற்பட்டு வருகிறது. இந்த குழுமம் கப்பல் போக்குவரத்து, சரக்கு கையாள்கை, உற்பத்தி, வியாபாரம், உடைமை அபிவிருத்தி மற்றும் ஹோட்டல் துறை போன்றவற்றில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து வர்த்தக பிரிவுகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ள பெருமையை கொண்டுள்ளதுடன், மொபில் 1 வர்த்தக நாமத்தின் அனுகூலத்தை இலங்கையர்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
 
2009ஆம் ஆண்டு EZY ரேசிங் அணி தாபிக்கப்பட்டதிலிருந்து, இலங்கையின் மோட்டார் ரேசிங் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்த போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதற்கான நிறுவனங்களின் ஆர்வத்தையும் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது. பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்த EZY ரேசிங் முன்னெடுத்திருந்ததுடன், இலங்கையில் மோட்டார் பந்தய விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்துடனான அனுசரணையின் மூலம் மொபில் 1 எண்ணெய்யை உபயோகிக்க முன்வந்துள்ளமையானது, இந்த நடவடிக்கைகளின் வெற்றியை எடுத்துக் காட்டுவதாக அமைந்து;ளது. 
 
EZY ரேசிங் அணியின் அதிபரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷப்ராஸ் ஹம்சதீன் கருத்து தெரிவிக்கையில், 'மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்துடனும் மொபில் 1 உடனும் பங்குடைமையை ஏற்படுத்தியுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். மோட்டார் பந்தய விளையாட்டுத்துறையில் நீண்ட கால அனுபவத்தை கொண்டுள்ள இந்த தயாரிப்பு, இந்த விளையாட்டின் வளர்ச்சியில் எப்போதும் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கியுள்ளது. எண்ணெய் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான திரவங்கள் போன்றவற்றை பந்தயங்களுக்காக தெரிவு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே இந்த பங்குடைமையின் மூலம் இந்த துறையில் காணப்படும் தலைசிறந்த தயாரிப்பை நாம் எமது அணிக்காக ஏற்படுத்தியுள்ளோம்' என்றார்.
 
மெக்லாரான்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஜயவர்த்தன கருத்து தெரிவிக்கையில், 'குறுகிய காலப்பகுதியில் EZY ரேசிங் அணியானது தமது அர்ப்பணிப்பான செயற்பாடுகளின் மூலம் மிகவும் புகழ்பெற்ற அணியாக வளர்ந்துள்ளது. அவர்களின் சாரதிகளுக்கு மொபில் 1 எண்ணெய் மூலம் வலுச்சேர்ப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
  
இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் விளையாட்டுத்துறையில் மிகப்பெரும் தூண்களாக திகழும் EZY ரேசிங் அணி மற்றும் மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் (மொபில் 1) போன்றன தமது பொது பெறுமதிகளை பங்கிட்டுக் கொள்வதுடன், இலங்கையின் மோட்டார் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்க்க தம்மை அர்ப்பணித்துள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .