2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'Green Friends' நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்யும் பீப்பள்ஸ் லீசிங்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் வங்கியியல் சாராத நிதித்துறையில் முன்னிலை வகிக்கும் நிதிசார் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி 'Green Friends' எனும் நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தினூடாக சூழலுக்கு பாதுகாப்பான வாகனங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு உதவிகளை வழங்கல் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் பாரிய அளவுகளில் முன்னெடுக்கப்படும் நிலையான சூழலுக்கு பாதுகாப்பான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பீப்பள்ஸ் லீசிங் அதிகளவு அக்கறை செலுத்துகிறது. இந்த புதிய திட்டத்திற்கு அமைவாக வலு பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பான நிர்மாண செயற்பாடுகள் மற்றும் கழிவு முகாமைத்துவம், மீள்சுழற்சி செயற்றிட்டங்கள், உயிரியல் வாயு மற்றும் சூரியகலன்கள் ஆகிய வலு தொடர்பான திட்டங்களுக்கு தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் வசதியான முறையில் நிதிசார் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளது. சூழல் பாதுகாப்பான ஹைபிரிட் மற்றும் நனோ வாகனங்களுக்கும், இயந்திர சாதனங்களுக்கும் லீசிங் வசதிகள் Green Friends திட்டத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Green Friends வாடிக்கையாளர்கள் அனுபவிக்கக்கூடிய அனுகூலங்களாக, ஆகக்குறைந்த லீசிங் வட்டிவீதங்கள், குறைந்த காப்புறுதி தவணைக்கட்டணங்கள் மற்றும் குறைந்த மதிப்பீட்டு கட்டணங்கள் என்பவை அமைந்துள்ளன. எனவே சூழல் பாதுகாப்பான செயற்றிட்டங்களுக்கு சிறந்த அனுகூலங்களை வழங்கும் நிறுவனமாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் அறிமுகம் தொடர்பில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான டி.பி குமாரகே அவர்கள் கருத்து வெளியிடுகையில் 'சூழலை பாதுகாக்கும் வகையில் இது போன்ற சமூக பொறுப்புணர்வு வாய்ந்த செயற்றிட்டங்களை நாடு முழுவதும் பீப்பள்ஸ் லீசிங் கம்பனி முன்னெடுக்கிறது. எமது நாடு குறித்து அதிக கவனம் செலுத்துகிறோம். இலங்கையின் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் இது போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறோம். 'Green Friends' திட்டத்தினூடாக சூழல் பாதுகாப்பான செயற்றிட்டங்களில் ஈடுபடும் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்வதுடன், சூழலுக்கு பாதுகாப்பான வாகனங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கும் நாம் உதவிகளை வழங்குகிறோம். எனவே எமது வர்த்தக செயற்பாடுகளின் ஓரங்கமாக இது அமைந்துள்ளது. சூழல் பாதுகாப்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வமாக உள்ளவர்களை எம்முடன் கைகோர்த்து, விசேட நிதி அனுகூலங்களை அனுபவிக்குமாறு அழைக்கிறேன்' என்றார்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான பிரதி பொது முகாமையாளர் லயனல் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில் 'கம்பனியின் மூலம் சூழல் பாதுகாப்பான செயற்றிட்டங்களுக்கு நம்ப முடியாதளவு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் நிதிசார்ந்த துறையில் காணப்படும் இதர நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அளவு அதிகமாகும். உலக வெப்பமடைதல் என்பது உலகின் அனைவரையும் பாதிக்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. எமது வர்த்தக செயற்பாடுகளின் மூலமாக நிலையான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும். இன்றைய உலகின் இந்த செயற்பாடு மிகவும் அத்தியாவசியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எதிர்கால தலைமுறை என்பது வலு பிறப்பாக்கல் செயற்பாடுகளில் அதிகளவு தங்கியிருக்கும். எமது இந்த 'Green Friends' திட்டமானது, இந்த செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.

'Green Friends' திட்டத்தின் அறிமுக நிகழ்வின் போது, மூன்று தொழில் முயற்சியாளர்கள் நிதிசார் சேவைகளை பெற்றுக் கொண்டனர். வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளரான தில்ஷான் விஜேகோன் ஹைபிரிட் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கான லீசிங் வசதியைப் பெற்றுக் கொண்டார். நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ருவன்சிறி டெய்ரீஸ் (பிறைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.எம் தயலால் சூழல் பாதுகாப்பான குளிரூட்டும் ட்ரக் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக நிதித் தீர்வை பெற்றிருந்தார். குகுலேகங்க தேயிலை தொழிற்சாலையின் பணிப்பாளர் பசிந்து பீரிஸ் தமது தொழிற்சாலையில் வலு விரயத்தை குறைக்கும் வகையில் அமைந்த சாதனமொன்றை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவிகளைப் பெற்றிருந்தார்.

'Green Friends' திட்டம் குறித்து ருவன்சிறி டெய்ரீஸ் (பிறைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.எம்.தயலால் கருத்து வெளியிடுகையில் 'எமது நிறுவனம் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. குளிர்சாதன வசதிகளுடன் அமைந்த இரு ட்ரக் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதியை திரட்டிக்கொள்வதற்கு தேவையான லீசிங் வசதிகளை விசேட சலுகை கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த வாகனங்கள் வர்த்தக செயற்பாடுகளுக்கு பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும் சூழலுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும்' என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 'பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் புசநநn குசநைனௌ திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்த வசதிகள், சூழலுக்கு பாதுகாப்பான வர்த்தக செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக அமையும். சூழலுக்கு பாதுகாப்பான முறையில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு சிறந்த உதவியாக அமைந்திருப்பதுடன், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X