2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

i-Roof வர்த்தக நாமத்துக்கு விருது

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

Idea Group of Companies வழங்கும் கூரைத் தீர்வான ‘i-Roof’ ஐ இலங்கையர்களுக்கு வழங்குகிறது.  

2018 - SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் வர்த்தக நாமத்துக்கு, ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாம விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.  

2018 - SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரித்தானியாவின் சிறந்த 100 நிறுவனங்களில் பணிப்பாளரான முதலாவது இலங்கையர் எனும் பெருமையைப் பெற்ற லலித் டி மெல் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.  

உலகின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி Idea குரூப், ‘i-Roof’ தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. நாட்டின் முன்னணி கையகப்படுத்துநர்கள் பலரின் உள்ளங்களை வென்ற நாமமாக இது திகழ்கிறது.   

 ‘i-Roof - XTRA’, ‘i-Roof- SUPER’ மற்றும் ‘i-Roof-VEERA’. மூன்று வகையான பொருட்களை ‘I-Roof’ தன்வசம் கொண்டுள்ளது.   

மெட் முடிவுடன் ‘i-Roof -XTRA’ தயாரிக்கப்படுவதுடன், க்ளொஸ் முடிவுடன் ‘i-Roof- SUPER’ தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைக்கு மிகவும் பொருத்தமான தீர்வாக ‘i-Roof-VEERA’ அமைந்துள்ளது.   

“Roof with best benefits” (சிறந்த அனுகூலங்களுடனான கூரை) எனும் தொனிப்பொருளுடன் தயாரிக்கப்படும் ‘i-Roof’, இலங்கையில் ISO 9001:2015 சர்வதேச சான்றிதழுக்கமைய உற்பத்தி செய்யப்படும் ஒரே ASA பொலிமர் கூரைத்தகடாக அமைந்துள்ளது.  

கூரையை நிறுவுவது தொடர்பாக நிர்மாணிப்போரால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், ஒரு சதுர அடிக்கான ஆகக்குறைந்த செலவு ‘i-Roof’ இனால் வழங்கப்படுகிறது. இதில் படல்களை பொருத்துதல், வெப்ப தாங்கிகளை பொருத்தல் மற்றும் தாட்சிங் ஷீட்களை பொருத்துதல் போன்றன அடங்கியுள்ளன. 

கூரைத் தகடுகள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அலுமினிய ஷீட்கள் (வழமையான தோற்றம்) மற்றும் அலுமினிய ஷீட்கள் (கூரைத்தகடு தோற்றம்) போன்றவற்றுக்கான விலை பெருமளவு அதிகமானதாக காணப்படுகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .