Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ikman Jobs அதன் ஆர்வமூட்டுகின்ற மற்றும் காலத்திற்கு ஏற்ற புதிய முயற்சி தொடர்பில் அறிவித்துள்ளதுடன், பயனர்களுக்கு வேகமாகவும், இலகுவான பயன்பாடு கொண்டதாகவும் அமையும் வகையில், மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான சிறப்பம்சங்களுடன் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு தொடர்பில் பெப்ரவரியில் அறிவித்திருந்ததுடன், இப்போது தொழில் தேடுபவர்கள் மற்றும் தொழில்தருநர்கள் ஒரு மாதத்திற்கு 6000 க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை மிக எளிதாக இதன் மூலமாகப் பேணி, கண்டறிந்து கொள்ள முடிவதாக ikman jobs அறிவித்துள்ளது.
ikman Jobs அதன் புதிய சிறப்பம்சங்கள் மூலம் தொழில்தருநர்கள் தகுதியான பணியாளர்களைத் தேடுவதற்கான சிறந்த தளத்தை உருவாக்கியுள்ளதுடன், இது நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒருவரின் தொழிற்கனவை நனவாக்கும் தொழில்தருநரால் நோக்கப்படும் என்று உத்தரவாதத்துடன், புதுப்பித்த தகவல்களுடன் ஒன்லைனில் தனிப்பட்ட சுயவிபரத்தை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது. 170 க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட தொழில்தருநர்களால் நோக்கப்பட்டு தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களையும் இது வழங்குகின்றது.
மேலும், குறித்த தேடலுக்கான வடிகட்டல், அனைத்திலிருந்தும் சிலவற்;றை மாத்திரம் தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் அம்சங்கள், வேண்டியவாறு தரவரிசைப்படுத்தும் தெரிவுகள் மற்றும் விண்ணப்பதாரிகளின் தரவுத்தளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு மேலதிகமாக பணிக்கு ஆட்சேர்க்க விரும்புகின்றவர்கள் இப்போது ஒவ்வொரு மாதமும் ஒரு வேலைவாய்ப்பு விளம்பரத்தை முற்றிலும் இலவசமாக இடுகையிடலாம்.
மேற்குறிப்பிட்ட ஆர்வமூட்டும் அம்சங்களுக்கு மேலதிகமாக, தொலைபேசியில் செய்தி அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட ஒருங்கிணைந்த தெரிவுகளைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பெறுவதற்கான ஒரு சிறப்பம்சத்தை பணிக்கு ஆட்சேர்க்க விரும்புகின்றவர்களுக்காக இந்த மறுசீரமைப்பின் மூலமாக அறிமுகப்படுத்தி, ஆட்சேர்ப்பு செயல்முறையை இன்னும் எளிதாக்குவதுடன், முன்னெப்போதையும் விட மிகவும் ஒழுங்கமைப்புச் செய்துள்ளது.
துணை பணிப்பொறுப்புகள் வகைப்பாட்டின் அறிமுகம் வேலை தேடுபவர்களுக்கு வேலைகளை எளிதில் தேட உதவுகிறது. ஏனெனில் இது சரியான விண்ணப்பதாரருக்கு சரியான வேலைக்கு விண்ணப்பிக்க ஒரு வழிமுறையைக் காண்பிக்கும் வகையில் அவரது தேடல் சுமையைக் குறைக்கிறது.
இதற்கிடையில், சிறந்த வெளிப்பாட்டிற்காக நிறுவனத்தின் இலச்சினையுடன் விளம்பரத்தில் வேலை விபரத்தை சித்தரிக்கும் வகையில் படத்தையும் பணிக்கு ஆட்சேர்க்க விரும்புகின்றவர்கள் இணைக்க இடமளிக்கும் வகையில் ikman Jobs தனது சிறப்பம்சத்தை புதுப்பித்துள்ளது. சரியான விண்ணப்பதாரிகளின் கவனத்தை ஈர்க்க போட்டி நிறுவனங்கள் மத்தியில் ஒரு நிறுவனத்தின் பிரபல்யத்தை மேம்படுத்த இந்த அம்சம் உதவுகிறது.
ஒட்டுமொத்த செயல்முறையையும் செலவு குறைந்ததாக ikman Jobs ஆக்கியுள்ளது. இப்போது பணிக்கு ஆட்சேர்ப்பவர்கள் இந்த அற்புதமான அம்சங்களை எவ்விதமான கடப்பாடுகளுமின்றி ஒரு மாதத்திற்கு முற்றிலும் இலவசமாக முயற்சி செய்யலாம். மேலும், ஒரு மாத இலவச முயற்சிக்குப் பின்னரும் நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கான மாதாந்த செலவு இலங்கையின் பிற ஆட்சேர்ப்பு தளங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகவே உள்ளது.
இது ஒரு விளம்பரப்படுத்தல் தளமாகவும், ஒரு மாதத்தில் 450,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு திறமைசாலிகள் குழாமாகவும், 400,000 வரையான சுயவிபரக் கோவைகளைக் கொண்டுள்ளமையாலும், மாதமொன்றில் 6,000 க்கும் மேற்பட்ட நேரடி விளம்பரங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தாலும் இலங்கையின் பெரும்பான்மையான நிறுவனங்கள் ikman Jobs தளத்தை நம்புகின்றன.
9 minute ago
19 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
35 minute ago
46 minute ago