2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

KIA மோட்டர்ஸ் லங்காவுடன் மொபில் லுப்ரிகன்ட்ஸ் கைகோர்ப்பு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் காணப்படும் முன்னணி மசகு எண்ணெய் நிறுவனமான மொபில் லுப்ரிகன்ட்ஸ் பிரைவேற் லிமிடெட், உலகப்புகழ் பெற்ற மோட்டார் வாகனங்களை இலங்கையில் விநியோகிக்கும் KIA மோட்டர்ஸ் லங்கா உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், மொபில் மசகு எண்ணெய் வகைகள், அனைத்து விதமான KIA டீசல் வாகனங்களிலும் இலங்கையில் முஐயு மூலமாக வழங்கப்படும் பராமரிப்பு சேவைகளின் போது வழங்கப்படவுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மொபில் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் டிலான் செனவிரட்ன மற்றும் KIA மோட்டர்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ட்ரிவ் பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.  

'கார் பிளான்' நிறுவனத்துடன் இணைந்து 1996ஆம் ஆண்டு முதல் 17 வருடங்களாக இலங்கையில் KIA வாகனங்களுக்கு சிறந்த சேவைகளை KIA மோட்டர்ஸ் வழங்கி வருகிறது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து KIA மோட்டர்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ட்ரிவ் பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'KIA மோட்டர்ஸ் என்பது மொபில் லுப்ரிகன்ட்ஸ் உடன் இணைந்து பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளது. இதன் மூலம் சிறந்த உறவு மற்றும் பங்காண்மை ஆகியன இரு வர்த்தக நாமங்களிடையேயும் காணப்படுகிறது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதன் மூலம் இரு நிறுவனங்களுக்குமிடையிலான புரிந்துணர்வு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்க வழிகோலியுள்ளது' என்றார். 

Exxon Mobil மூலம் உற்பத்தி செய்யப்படும் உலகின் முதல் தர மசகு எண்ணெய் வகையான மொபில் மசகு எண்ணெய் வகையை நாடு முழுவதும் விநியோகிப்பதில் இலங்கையில் மொபில் லுப்ரிகன்ட் கம்பனி திகழ்கிறது. KIA உடன் இணைந்து மொபில் லுப்ரிகன்ட் கம்பனி செயலாற்ற முன்வந்துள்ளமையானது, இலங்கையின் வாகன சந்தையில் இடம்பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் மொபில் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் டிலான் செனவிரட்ன கருத்து தெரிவிக்கையில், 'இரு கம்பனிகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதற்கு மேலாக, இந்த புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலமாக வாகனத்துறையில் மேலும் அபிவிருத்திக்கான வழிகாட்டல் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .