Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2014 டிசெம்பர் 23 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிசம்பர் 01ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பானது (LBCH), மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமது பணியாளர்களை பாதுகாப்பதற்கான குறிப்பாணையை அனுப்பி அழைப்பு விடுத்திருந்தது.
2014 மூன்றாவது காலாண்டு முடிவில் இலங்கையில் 2000க்கும் மேற்பட்டோர் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக LBCH குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டு முடிவில் பதிவு செய்யப்பட்ட 1061 வழக்குகளில் அதிகமானோர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலப்பகுதியில் 21 எயிட்ஸ் சம்பந்தப்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.
'இலங்கையில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய் பரவுதல் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அனுபவ ரீதியான தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோய்த்தாக்கத்தை சூழவுள்ள இரகசியம் மற்றும் சமூக களங்கம் ஆகியவையே இதற்கு காரணம் என நாம் நம்புகிறோம்' என LBCH இன் தலைவி நதீஜா தம்பையா தெரிவித்தார். பெரும்பாலான நாடுகள் விழிப்புணர்வு திட்டங்கள் ஊடாக உயிர்கொல்லி நோய்களை முறியடித்துள்ளன என மேலும் அவர் தெரிவித்தார்.
இதை கருத்தில் கொண்டு LBCH ஆனது, அதன் அங்கத்துவ நிறுவனங்களில் இலவசமாக விசேட விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் LBCH ஆனது கூட்டாண்மை துறைகளில் அதன் பணியிடத்தில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் குறித்த கொள்கைகளை அறிமுகம் செய்வதை ஊக்குவித்து வருகிறது.
'எச்ஐவி என்பது மரண தண்டனையாக இருக்க முடியாது. இந் நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் ஆரம்ப நிலையில் நோய் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்கைள் மூலம் நீண்டநாட்களிற்கு வாழ முடியும். பணியாளர்களுக்கு தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளையும், பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தேவையான வளங்களை வழங்குதலும் மிக முக்கியமாகும் என தம்பையா தெரிவித்தார். 'Know your HIV status' எனும் தேசிய திட்டத்தில் பங்குபற்றி தங்களது பணியாளர்கள் மத்தியில் HIV பரிசோதனைகள் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டாண்மை நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
LBCHஇன் அங்கத்துவ நிறுவனங்களுள் சிட்டி பேங்க், சிலோன் டுபாக்கோ நிறுவனம், Deutschebank, Access Engineering, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங், செவ்றோன், ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, DFCC வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி மற்றும் எட்டிசலாட் போன்ற மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.
இலாபநோக்கமற்ற நிறுவனமான LBCH ஆனது, சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுபாட்டு திட்டம், தொழில் அமைச்சு, ILO, UNAIDS, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழிலாளர் சம்மேளனம் போன்ற தனியார் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்தை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago