2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

MD மூலம் சுவை மிகுந்த ஜெலி வகைகள் அறிமுகம்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வழங்கும் இலங்கையின் முதற்தர உற்பத்தியாளரும், விநியோகஸ்தருமான லங்கா கெனரிஸ் நிறுவனம், தற்போது உங்கள் சுவை நரம்புகளை தூண்டக்கூடிய ஜெலி கிறிஸ்டல்ஸ் தயாரிப்பினை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மிகச் சிறந்த மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதும், அதியுயர் தரத்திற்கமைய விநியோகிக்கப்பட்டு வரும் MD ஜெலி வகையானது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் ஸ்ட்ரோபரி, மிக்ஸ் ஃபுருட், ஒரேன்ஜ், மெங்கோ, லெமன், லைம், பிளெக் கரண்ட், ராஸ்பெர்ரி மற்றும் அப்பிள் போன்ற வௌ;வேறு சுவைகளில் கிடைக்கும் 100 கிராம் நிறையுடைய பக்கற் நாடு முழுவதும் உள்ள சில்லறை மற்றும் நவீன வர்த்தக நிலையங்களில் வெறும் ரூ.70 இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடும்ப கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு பொருத்தமான 500 கிராம் நிறையுடைய ரூ.240 பெறுமதியான பொருளாதார பக்கற்றானது தற்போது மிக்ஸ் ஃபுருட், ஒரேன்ஜ், ஸ்ட்ரோபரி மற்றும் அப்பிள் சுவைகளில் கிடைக்கிறது.

அசல் பழங்களின் சுவை கொண்ட MD ஜெலி வகைகள் களியாட்ட நிகழ்வுகள், திருமணம் அல்லது தினசரி உணவு வேளைக்கு பின்னர் சிற்றுண்டியாக உட்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த டெஸட் (Dessert) வகையாகும். டெஸட் மற்றும் குளிர்பானங்களை விரும்புவர்கள் மத்தியில் MD தயாரிப்புகள் மிகவும் பிரபல்யமாகும்.

லங்கா கெனரிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MD வர்த்தகநாமமானது, பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் துறையில் 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கையில் MD ஜாம், கோர்டியல் மற்றும் சோஸ் வகைகளுக்கான சந்தை தலைமைத்துவத்தை கொண்டுள்ளது. மேலும் இந் நிறுவனம் தமது உற்பத்தி வரிசையை விஸ்தரிக்கும் நோக்கில் MD நெக்டா (Ready to Drink)> MD Delight squash concentrates, இயற்கை சுவையடங்கிய உடனடி பவுடர், சட்னி, ஊறுகாய், சம்பல், வினிகர், தக்காளி ப்யூரி மற்றும் பேஸ்ட் வகைகள் போன்ற மிகப்பெரிய உணவு மற்றும் குடிபான வகைகளை விநியோகித்து வருகிறது.

MD நிறுவனத்தின் மூலம் புடிங் மிக்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் கறி வகைகள், பழ கிறீம்கள், கேக் மூலப்பொருட்கள், பதப்படுத்திகள் மற்றும் சிரப் வகைகள் போன்றவையும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MD தயாரிப்புக்கள் தற்போது USA, UK, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மாலைதீவு மற்றும் கனடா உள்ளிட்ட 35 நாடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந் நிறுவனம் SLS சான்றிதழ், ISO 22,000 மற்றும் HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .