
இலங்கையின் முன்னணி உணவு மற்றும் குடிபானங்கள் உற்பத்தியாளரும், விநியோகிஸ்தருமான லங்கா கனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது அதன் கோர்டியல் வாடிக்கையாளருக்கு 42 '22கரட்' தங்க நாணயங்களை வெல்லக்கூடிய ஊக்குவிப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. MD வர்த்தகநாமத்தின் கீழ் சந்தைப்படுத்தப்படும் இந்நிறுவனத்தின் கோர்டியல் வகைகள் கடந்த பல ஆண்டுகளாக தமது வாடிக்கையாளருக்கு தூய, இயற்கையான சுவைகளை வழங்கி தனக்கென நன்மதிப்பை கட்டியெழுப்பிக் கொண்டுள்ளது.
சிறந்த மூலப்பொருட்கள் மற்றும் உயர் தரத்திற்கமைய உற்பத்தி செய்யப்படும் MD கோர்டியல் வகைகள் மாம்பழம், பழக்;கலவை, நெல்லி, ஒரேன்ஞ், கொடித்தோடை, தேசிக்காய், பெலி மற்றும் பிளெக் கரன்ட் போன்ற சுவைகளில் கிடைக்கின்றன. 400ml மற்றும் 750ml போத்தல்களை நாடுமுழுவதும் உள்ள சில்லறை கடைகளிலும் மற்றும் சுப்பர் மார்கெட்டுகளிலும் கொள்வனவு செய்ய முடியும்.
இந்த ஊக்குவிப்பு திட்டத்தில் நுழைய வாடிக்கையாளர்கள், விசேட 'பவுமே லேபலய' எனும் ஸ்டிக்கரைக் கொண்ட (தங்க நாணய லேபிள் ஸ்டிக்கர்) 750ml போத்தலின் ஒரு லேபிளை அல்லது 400ml போத்தலின் இரண்டு லேபிள்களை கடித உறையின் மேல் 'பவுமே லேபலய' (Pawme Labalaya) என குறிப்பிட்டு இல 45/75, நாரஹேன்பிட்ட வீதி, கொழும்பு 05 எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். இதன் போது வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவதுடன், நாளாந்தம் தங்க நாணயம் வெகுமதியாக வழங்கப்படும். மேலும் இப் போட்டியில் நுழைபவர் முதற்தடவையில் வெற்றி பெறாவிட்டாலும், தொடர்ந்தும் குலுக்கலில் இடம்பெறுவார்கள். இதனூடாக அனைத்து பங்கேற்பாளருக்கும் தங்க நாணயத்தை வெல்வதற்குரிய 42 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
லங்கா கனரிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MD வர்த்தகநாமமானது பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் துறையில் 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கையில் MD ஜாம், சோஸ் மற்றும் கோர்டியல் வகைகளுக்கான சந்தை தலைமைத்துவத்தை கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தமது உற்பத்தி வரிசையை விஸ்தரிக்கும் நோக்கில் MD நெக்டா (Ready to Drink), MD Delight squash concentrates, இயற்கை சுவையடங்கிய உடனடி பவுடர், சட்னி, ஊறுகாய், சம்பல், வினாகிரி, தக்காளி ப்யூரி மற்றும் பேஸ்ட் வகைகள் போன்ற மிகப்பெரிய உணவு மற்றும் குடிபான வகைகளை விநியோகித்து வழங்குகிறது. MD ஆனது மேலும் புடிங் மிக்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், பழ கிறீம்கள், ஐசிங் சீனி, பதப்படுத்திகள் மற்றும் சிரப் வகைகள் போன்ற கேக் மூலப்பொருட்களையும் சந்தைப்படுத்தி வருகிறது.
MD தயாரிப்புக்கள் தற்போது USA, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மாலைதீவு மற்றும் கனடா உள்ளிட்ட 35 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதுடன், Texco போன்ற சர்வதேச சுப்பர் மார்கெட் வலையமைப்புகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. இந் நிறுவனம் SLS சான்றிதழ், ISO 22,000 மற்றும் HACCP போன்ற சான்றிதழ்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
