2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

MSc கற்கை நெறிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை

A.P.Mathan   / 2014 மே 09 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களுக்கு பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட MSc தகைமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு, உயர்தர கற்கைநெறிகளை வழங்கும் கல்வியகமான SLIIT, தற்போது விண்ணப்பங்களை கோரியுள்ளது. MSc in IT (Specialising in Cyber Security) மற்றும் MSc Degree in Enterprise Applications Development ஆகிய கற்கைகளுக்கு இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேற்படி கற்கைநெறிகள் தொடர்பிலான திறந்த தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று எதிர்வரும் மே 20ஆம் திகதி SLIIT Metro Campus வளாகத்தில் பி.ப. 6 மணி முதல் பி.ப. 8 மணி வரை இடம்பெறும். மேலும், ஒவ்வொரு கற்கைகளுக்கும் அவசியமான தேவைப்பாடுகள் குறித்த விளக்கமளிக்கப்படும். அத்துடன், பங்குபற்றுநர்களுக்கான தெரிவு, தெரிவு பரீட்சை, நேர்காணல் பெறுபேறுகளின் மூலம் மற்றும் பரிந்துரைகளின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

SLIIT MSc in Information Technology கற்கைகளுக்காக தற்போது 11ஆவது தடவையாக விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த கற்கைகளுக்கு  விண்ணப்பிப்பதற்கு மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், கணனி விஞ்ஞானம், கணனி பொறியியல் கற்கைகள் அல்லது ஏனைய எந்தவொரு கற்கையையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது SLIIT இனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த கல்வியகமொன்றில் அங்கத்துவத்தை பெற்றிருப்பதுடன் தொழில் அனுபவத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
   
SLIIT MSc in Information Management கற்கைகள் பட்டதாரிகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளில் அங்கத்துவம் பெற்றுள்ளதுடன், நிர்வாக துறையில் அனுபவம் வாய்ந்த தரப்பினருக்கு விசேடமானதாக அமைந்த கற்கைநெறியாகும். பங்குபற்றுநர்களுக்கு, தகவல் முகாமைத்துவம் மற்றும் தீர்மானமெடுத்தல் ஆகியவற்றில் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆப்ளிகேஷன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இந்த கற்கையை தொடர விரும்பும் மாணவர்கள் எந்தவொரு பிரிவிலும் இளமானி பட்டத்தை எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகாரம் பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த கல்வியகத்தில் அங்கத்துவம் பெற்றிருப்பது அல்லது முகாமைத்துவ பிரிவில் ஆகக்குறைந்தது மூன்று ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருப்பது அவசியமாகும். 

பல்கலைக்கழங்கள் சட்ட விதிமுறைக்கு அமைய, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுள்ளதன் மூலம் SLIIT இனால் Bachelor's மற்றும் Master's Degrees in Computing, Business மற்றும் Engineering போன்றன வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் விண்ணப்பங்களை கல்வியகத்தின் இணையத்தளமான www.sliit.lk அல்லது இல. 28, சென். மைக்கல்ஸ் வீதி, கொழும்பு 03 எனும் முகவரியைச் சேர்ந்த BOC மேர்ச்சன்ட் டவரில் அமைந்துள்ள SLIIT Campus இலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக விபரங்களை www.sliit.lk அல்லது mscinfo@sliit.lk எனும் மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X