2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'My Friend' செயற்றிட்டம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாரஹேன்பிட்டி பராக்கிரமபாகு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த பல சிறுவர்களுக்கு உதவும் முகமாக, My Friend செயற்றிட்டத்துடன் டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி. நிறுவனமும் 'த பிரிட்டிஷ் ஸ்கூல்' பாடசாலையும் அண்மையில் கைகோர்த்திருக்கின்றன.

இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் My Friend செயற்றிட்டத்தின் தலைவர் பௌசுல் ஹமீட், டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி. நிறுவனத்தின் விசுவாசம் மற்றும் M – வணிக பிரிவு  தலைமை அதிகாரியான சிந்தன ஜயசேகர, த பிரிட்டிஸ் ஸ்கூல் பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டனர்.

டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது, தனது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்த ஸ்டார் புள்ளிகளை My Friend செயற்றிட்டத்திற்கு அன்பளிப்புச் செய்யுமாறு கடந்த வருடத்தின் பிற்பகுதியில் ஊக்கமளித்திருந்தது. அதன்மூலம் திரட்டப்பட்ட நிதியானது, பராக்கிரமபாகு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வசதிகுறைந்த சிறுவர்களுக்கு ஒரு வருட காலத்துக்கு முழுமையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவை வழங்குவதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதேவேளை, கடந்த பண்டிகை காலத்தில் My Friend செயற்றிட்டத்திற்காக பெருமளவிலான பாடசாலை காகிதாதி உபகரணங்கள் சேகரிக்கப்பட்ட போது அப்பணியில் த பிரிட்டிஷ் ஸ்கூல் மாணவர்களும் ஒன்றாக கைகோர்த்திருந்தனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட சில பொருட்கள், பராக்கிரமபாகு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேவையுள்ள சிறுவர்களுக்கு அத்தினத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டது. த பிரிட்டிஷ் ஸ்கூல் அதிபர் கலாநிதி ஜோன் ஸ்கார்த் கூறுகையில், 'இந்த செயற்றிட்டத்திற்கு நாம் எமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றோம். இச் செயற்றிட்டம் தொடர்பில் எமது சிறுவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக காணப்படுவதுடன், மேற்படி பாடசாலை உபகரணங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் அயராது பாடுபட்டுள்ளனர். இந்த செயன்முறையின் ஊடாக, வாழ்க்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரு பெறுமானங்களான 'உதவி வழங்குதல் மற்றும் பகிர்ந்தளித்தல்' என்ற பண்பின் முக்கியத்துவத்தையும் நாம் அவர்களுக்கு போதிக்கின்றோம். இதனை அவர்கள் உணர்ந்து போற்றுகின்றனர்' என்றார்.

நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்த பராக்கிரமபாகு மகா வித்தியாலய அதிபர் திரு கெமுனு வீரக்கோன், இது ஒரு மனித சமூதாயத்திற்கான சேவை என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறுகையில், 'எமது பாடசாலை அறுபது வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். இங்கு; சுமார் 350 சிறுவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுள் பலர் நாரஹேன்பிட்டி மற்றும் அதனையண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். நாம் சென்று உதவியை கேட்காத நிலையிலேயே ஆல குசநைனெ செயற்றிட்டமானது எம்முடைய பாடசாலைக்கு உதவுவதற்கு தாமாகவே தெரிவு செய்தமையினால், இது தனிப்பட்ட முறையில் எமது இதயங்களை தொட்டுள்ளது. இந்தச் சிறுவர்களின் வாழ்க்கையை உருவாக்குவதற்காகவும், இந்த சமூகத்தில் பொறுப்புள்ள ஆண்களாகவும் பெண்களாகவும் அவர்கள் முன்னேறும் விதத்தில் அவர்களுக்கு வலுவூட்டுவதற்காகவும் எமது உத்தியோகத்தர்கள் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். எமது சிறுவர்களுக்கு உதவுகின்ற விதத்திலமைந்த இந்த சைகையானது ஒரு நீண்ட தூரம் பயணிக்கும்' என்று தெரிவித்தார்.

My Friend செயற்றிட்டத்தின் தலைவரான பௌசுல் ஹமீட், எம்மைச் சூழவுள்ள சின்னஞ் சிறார்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை கொண்டுவரும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 'இச் சிறுவர்களே எமது எதிர்காலம் ஆகும். அவர்களுக்கு உணவூட்டி, ஆடை அணிவித்து, கல்வி புகட்ட வேண்டும். எம்மைச் சுற்றி வாழ்கின்ற அதிர்ஷ்டம் குறைந்த சிறார்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதும், இவ்வுலகத்தை சிறந்ததொரு இடமாக மாற்றி அமைப்பதும் எம் அனைவரதும் கடமையாகும். அதுபற்றியதே My Friend செயற்றிட்டம். மாற்றமொன்றை கொண்டு வருவதற்காக My Friend செயற்றிட்டதுடன் பங்காளியாக கைகோர்த்தமைக்காக டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி. நிறுவனம் மற்றும் த பிரிட்டிஷ் ஸ்கூல் பாடசாலை ஆகியவற்றுக்கு நான் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றார்.

My Friend செயற்றிட்டத்தின் செயற்றிட்ட முகாமையாளரான நீல் குணவர்தன, பொறுப்புணர்வுமிக்க கூட்டாண்மை நிறுவனங்களைப் போலவே பொது மக்களும் இந்த புதுமையான சமூக சேவை செயற்றிட்டத்தின் முக்கிய பங்களிப்பாளராக மாற முடியும் என்று குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், 'அதன்படி நிதி அடிப்படையிலான அன்பளிப்புக்களை வழங்க  விரும்புவோர் My Friend Project – கணக்கு இலக்கம் 1110031987, கொமர்ஷல் வங்கி, கொள்ளுப்பிட்டி கிளை என்ற கணக்கில் வைப்புச் செய்வதன் ஊடாக அதனை மேற்கொள்ளலாம். பொருள் வகையாக அன்பளிப்புக்களை வழங்க விரும்பும் நபர்கள் 0777 354 570 என்ற தொலைபேசி இலக்கங்கத்திற்கு தொடர்பு கொள்வதன் ஊடாக அதனை மேற்கொள்ள முடியும். 2014ஆம் ஆண்டில் வசதி குறைந்த 1000 சிறுவர்களுக்கு ஒத்தாசைகளை வழங்குதல் எனும் My Friend செயற்றிட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து கொள்வதற்கு, பணம் அல்லது பொருள் அடிப்படையிலான எந்தவொரு அன்பளிப்பும் உதவியாக அமையும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .