2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

NBQSA 2013 நிகழ்வில் இரண்டு விருதுகளை தனதாக்கியது 99X Technology

A.P.Mathan   / 2013 நவம்பர் 16 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கி வரும் மென்பொருள் பொறியியல் வடிவமைப்பு துறையில் முன்னோடியாக திகழும் 99X Technology, அண்மையில் இடம்பெற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தேசிய தரச்சிறப்புகள் விருதுகள் 2013 இல் இரு விருதுகளை தனதாக்கியிருந்தது. R&D பிரிவில் 'WAG – Web Accessibility Guide' வெண்கல விருதும், Tools மற்றும் Infrastructure Applications பிரிவில் 'ALMUR' app சிறப்பு விருதையும் வென்றிருந்தது.
 
இந்த விருதுகள் குறித்து நிறுவனத்தின் இணை தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி என்பது தொடர்ச்சியாக புத்தாக்கங்களை ஏற்படுத்துவது எனும் எமது கொள்கைக்கு அடிப்படையான விடயமாக அமைந்துள்ளது. இந்த இலக்கை எய்துவது தொடர்பாக நாம் வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு சான்றாக இந்த விருது அமைந்துள்ளது' என்றார். 
 
ALMUR app என்பது அண்ணளவான தர்க்கம் அடிப்படையில் இரும (Binary) தீர்மானமெடுக்கும் ஆற்றலை வழங்குகிறது. இதன் மூலம் மனிதனின் தவறான முறைகளுக்கமைய மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை தவிர்த்துக் கொள்ள முடியும். ALMUR தொடர்பாக சாதாரணமாக எழக்கூடிய ஒரு வினாவாக, 'மாணவன் ஒருவன் கணித பாடத்தில் உயர்ந்த புள்ளிகளை பெற்றுள்ளதுடன், ஆங்கில பாடத்தில் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளான். புவியியல் சரிதம் பாடத்தில் உயர்ந்த புள்ளிகளை பெற்றுள்ள இந்த மாணவனை சித்தியடையச் செய்யலாமா?' என்ற கேள்விகள் போன்ற சிக்கலான விடயங்களை 'fuzzy logic' முறையில் ALMUR தீர்வு வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
 
ALMUR தெரிவுகள் தற்போது இரு iOS navigation appகளில் பயன்படுத்தப்படுகின்றன. 'Norge-serien' மற்றும் 'Boating Norway' ஆகிய அவையாகும். இந்த appகளின் பிரபல்யத்தன்மையின் மூலம் fuzzy logic முறையின் பாவனை ஏனைய காணப்படும் தர்க்க முறைகளை விட சிறந்ததாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 
 
ஆச்சரியமூட்டும் வகையில், இந்த app ஐ வடிவமைப்பதில் இலங்கையின் வெவ்வேறு கல்விநிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்களை கொண்ட செயற்திட்ட அணியினர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் 99X Technology இன் பல்கலைக்கழக உறவு திட்டத்தின் அமைவாக குறித்த திட்டத்தை வடிவமைப்பதற்காக உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தனர். இதன் மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் திறமை மற்றும் அறிவு போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன.
 
Web Accessibility Guide (WAG) மூலமாக இன்றைய காலகட்டத்தில் இணையத்தளங்களுக்கு காணப்படும் சவால்கள் நிறைந்த தேவைகளை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவும் வகையில் இந்த நுட்பம் அமைந்துள்ளது. WAG கட்டமைப்பு என்பது இணையத்தை பாவனையாளருக்கு மிகவும் நட்பான ஒரு ஊடகமாக மாற்றியமைப்பதுடன், பார்வை குறைபாடு கொண்ட நபர்களுக்கு உதவும் வகையில் WAG DevKit, WAG Report, WAG Assistant மற்றும் WAG Community எனும் நான்கு உள்ளடக்கங்களை கொண்டமைந்துள்ளது.
 
இந்த WAG கட்டமைப்பை வடிவமைக்கும் போது மூன்று விதமான பார்வை குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. முழுமையான பார்வை குறைபாடு, குறைந்தளவு பார்வை மற்றும் வர்ணங்கள் தென்படாமை போன்ற குறைகள் குறித்து ஆரயப்பட்டிருந்தன. இவை வடிவமைப்பாளர்களுக்கும் மீளாய்வு செய்பவர்களுக்கும் இணையத்தளங்கள் மற்றும் ஆப்ளிகேஷன்களுக்கான அணுகல்தன்மை குறைகளை இலகுவாக இனங்காண உதவியாக அமைந்திருந்தன. பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு அனுகூலம் வழங்குவதுடன், அவர்கள் பார்வையிடும் இணையத்தளங்களின் தன்மை இலகுவாக மாற்றியமைக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்த WAG கட்டமைப்பை வடிவமைத்த குழுவானது, தன்னார்வ அடிப்படையிலான வடிவமைப்பாளர்களுக்கு இந்த மென்பொருளை பரிசோதனை செய்து, புதிய விதிமுறைகளை சமர்ப்பிப்பதற்கான வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 
 
இலங்கையின் BCSSL கல்வியகத்தின் மூலம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் NBQSA 16 பிரிவுகளில் ஆப்ளிகேஷன்கள் முதல் மென்பொருள் கட்டமைப்பு முதல் ஊடக மற்றும் களியாட்ட ஆப்ளிகேஷன்கள் வடிவமைப்பு வரை உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த விருது வழங்கலின் நோக்கம் மூன்று வகையானதாக அமைந்துள்ளது. இலங்கையை சேர்ந்த நிறுவனங்களினதும் தனிநபர்களினதும் சிறப்பான சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளுக்கு சர்வதேச கௌரவிப்பை கிடைக்கச் செய்வதை முன்னிட்டும் உள்நாட்டில் வடிவமைக்கப்படும் மென்பொருட்கள் மற்றும் தீர்வுகளுக்கு சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய வகையில் தரத்தை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. 
 
சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் 99X Technology தாபிக்கப்பட்டதிலிருந்து, இலங்கையின் தகவல் தொடர்பாடல் மற்றும் BPO துறைகளில் முன்னோடியாக திகழும் நிறுவனமாக படிப்படியாக உயர்ந்துள்ளது. கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், ஒஸ்லோ, நோர்வே ஆகிய பகுதிகளில் அலுவலகங்களையும் கொண்டுள்ளது. உயர்திறன் வாய்ந்த மென்பொருட்கள் முதல் பிரத்தியேக மென்பொருள் வழங்குநர்களுக்கான சேவைகளையும் தீர்வுகளையும் வழங்குவதில் கம்பனி தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இது வரையில் நிறுவனம் 100க்கும் அதிகமான உயர் தரம் வாய்ந்த வர்த்தக நோக்கிலமைந்த மென்பொருள் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஊழியர்களின் நலன்களிலும அபிவிருத்திகளிலும் கவனம் செலுத்துவது மற்றும் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் பணியாற்றுவதற்கு உகந்த சிறந்த 15 கம்பனிகளில் ஒன்றாக இந்த ஆண்டு தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், சிங்கப்பூரில் இடம்பெற்ற நான்காவது ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் 2013 இல் திறன் முகாமைத்துவத்துக்கான விருதை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .