2025 ஜூலை 19, சனிக்கிழமை

oDocஇல் இலவச மருத்துவ ஆலோசனைகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

oDoc இல் தற்போது மாதாந்தம் 499 ரூபாய்க்குத் தம்மைப் பதிவு செய்து கொண்டு, நோயாளர்கள், மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், நீண்ட வரிசைகளில் காத்திருப்பது, கிருமிகள் நிறைந்த காத்திருக்கும் அறைகள், வைத்தியரைச் சந்திப்பதற்கான பல தடவைகள் அழுத்தங்கள் நிறைந்த  பயணம் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.  

oDoc என்பது இலங்கையின் முன்னணி ஒன்லைன் மருத்துவ ஆலோசனை கட்டமைப்பாகும். 270க்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பொது வைத்தியர்கள்,  விசேட வைத்திய நிபுணர்கள் இந்த app இல் காணப்படுவதுடன், வீடியோ மூலமான ஆலோசனைகளை வழங்க தயாராகவுள்ளனர்.

இதனூடாக நோயாளர்களுக்கு அனுபவம் வாய்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளை எந்தப் பகுதியிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக தம் வசம் திறன்பேசி, இணைய இணைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.   

oDoc என்பது நாடளாவிய ரீதியில் 14,000+ க்கும் அதிகமான பயனாளர்களின் நம்பிக்கையை வென்றது. இந்த App, 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டதுடன், துரித கதியில் பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வளர்ச்சியடைந்தது. oDoc இனால் எளிமையான, உயர் வினைத்திறன் வாய்ந்த தீர்வுகள் இலங்கையில் வழங்கப்படுகின்றன.

இந்த கட்டமைப்பினூடாக நோயாளர்களுக்கு பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுடன் இலகுவான முறையில் இணைப்பை ஏற்படுத்த உதவியாக அமைந்துள்ளதுடன், app ஊடாக வீடியோ மூலமான ஆலோசனைகளையும் பெற முடியும். பாவனையாளர்கள் app ஐ செயற்படுத்தி தமது தேவையை அதில் குறிப்பிட்டு, இலங்கை வைத்திய சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை வீடியோ அழைப்பினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

மருத்துவ ஆலோசனைகளுடன், தேவையான மருந்துகளையும் மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி தமது இருப்பிடத்துக்கே பெற்றுக் கொள்ள முடியும். சாதாரண வைத்தியர்களில் 75% ஆனவர்களின் விஜயங்களை ஓடியோ, வீடியோ தொடர்புகளினூடாக வினைதிறன் வாய்ந்த வகையில் பேணக்கூடியதாக இருக்கும் என அமெரிக்க மருத்துவ சங்கம் கண்டறிந்துள்ளது.

இந்த வகையான மருத்துவ சேவை வழங்கல், உலகளாவிய ரீதியில் பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளதுடன், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X