2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Pearson Edexcel கல்வி செயலமர்வு-2014

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் இடம்பெற்ற Edexcel பரீட்சைகளின் போது சில மாணவர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததாக, பிரித்தானியாவின் மிகப்பெரிய பட்டத்தை வழங்கும் நிறுவனமான Pearson அறிவித்திருந்தது. முதல் கட்டமாக சர்வதேச உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை தொடர்பில் பெருமையடைந்துள்ளதுடன், அவற்றில் பெருமளவான மாணவர்கள் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமக்கான அனுமதிகளையும் பெற்றுள்ளனர். இந்த பெருமைக்குரிய கல்விநிலையங்களில் Oxford, Warwick, லண்டன் Imperial கல்லூரி, UCL, கொலம்பியா பல்கலைக்கழகம், கனடா McGill பல்கலைக்கழகம், Pennsylvania State பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா Monash பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் Kings கல்லூரி போன்றன உள்ளடங்கியுள்ளன. 
 
Edexcel சர்வதேச உயர்தரம் என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்திட்டமாக அமைந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் உயர்தர தகைமைக்கு மாற்றீடானதாகவும் அமைந்துள்ளது. Pearsonஇன் உயர் தரங்களுக்கமைவாக மேற்பார்வை செய்யப்படுவதுடன், சர்வதேச ரீதியில் உயர்கல்வியை தொடரவுள்ளவர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. எட்டு பாடங்களை தெரிவுசெய்து கொள்ளமுடியும். கணக்கியல், வணிகக்கல்வி, உயிரியல், இரசாயனவியல், பொருளாதாரம், சட்டம், பௌதீகம் மற்றும் கணிதம் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. ஜனவரி மற்றும் ஜுன் மாத காலப்பகுதியில் பரீட்சைகள் இடம்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. 
 
பிரிட்டிஷ் கவுன்சில் உடன் இணைந்து Edexcel, அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான சர்வதேச உயர்தரம் தொடர்பிலும் மேலதிக கற்கைகளுக்கான வாய்ப்பு தொடர்பிலும் விசேட செயலமர்வுகளை ஏற்பாடு செய்கின்றது. இந்த கருத்தரங்குகளை பிரித்தானியாவின் Pearson தகைமைகள் சர்வதேச கல்வி நிலையத்தின் சர்வதேச பங்காண்மைகள் மற்றும் சர்வதேச சேவைகளுக்கான பணிப்பாளர் னுயஎனை David Crowther அவர்களின் மூலம் முன்னெடுக்கப்படும். 
 
மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இந்த செயலமர்வுகள் இடம்பெறவுள்ளதுடன், தரம் 8லிருந்து மேல் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த செயலமர்வுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். Edexcel பாடவிதானம் தொடர்பான பிந்திய மெருகேற்றங்கள் மற்றும் எதிர்வரும் பரீட்சைகளுக்கு எவ்வளவு சிறப்பாக எம்மை தயார்ப்படுத்திக்கொள்வது குறித்த விடயங்கள் இந்த செயலமர்வுகளின் போது கலந்துரையாடப்படும். 
 
இந்த செயலமர்வுகளுக்கான பதிவுகள் முற்றிலும் இலவசம் என்பதுடன், பதிவு செய்து கொள்ள வேண்டிய இறுதித்திகதி செப்டெம்பர் 17 ஆகும். பதிவுகளுக்கும், மேலதிக விபரங்களுக்கும் Edexcel அலுவலகத்தை 0112391103 எனும் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X