2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

SLIIT கல்வியகத்தில் ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழக துணைவேந்தர்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் 12 ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் நோக்கில் முதற்தடவையாக ஸெஃபீல்ட ஹலாம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பிலிப் ஜோன்ஸ் தமது கல்வி பங்காளரான SLIIT கல்வியகத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

'புன்னகை நிறைந்த முகங்களை காணும் போது இந்த விஜயம் மிகவும் பயனுடையது என கருதுகிறேன். ஸெஃபீலட் பல்கலைக்கழகம் மற்றும் SLIIT கைகோர்ப்பின் பிரதிபலன்கள் குறித்து மிகவும் பெருமையடைகின்றேன். எதிர்காலத்தில் புதிய கல்வி திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன' என பேராசிரியர் ஜோன்ஸ் தெரிவித்தார்.

தற்போது ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவத்தில் BBA கௌரவ கற்கைநெறி மற்றும் மின்னணு பொறியியலில் BEng (கௌரவ) பட்டதாரி கற்கைகளை மாணவர்கள் SLIIT கல்வியகத்தில் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் 37,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் SHU மற்றும் SLIIT ஆகியன கல்வி பங்காளர்களாக உள்ளது. இலங்கையைச் சேர்ந்த 1000 SHU பழைய மாணவர்களுள் சுமார் 700 மாணவர்கள் தமது பட்டதாரி கற்கைகளை SLIIT நிலையத்தில் அல்லது வசந்தகால top-up திட்டத்தின் கீழ் SHU பல்கலைக்கழகத்திற்கு சென்று பூர்த்தி செய்தவர்களாவர்.

இரு கல்வி நிலையத்துக்கும் இடையேயான சுமூகமான உறவினை சான்று பகரும் வகையில், SHU பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எமது கல்வியகத்துக்கு விஜயம் செய்திருந்தமை பெருமைக்குரிய விடயமாகும்' என SLIIT கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், தலைவருமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி திட்டங்களை அறிமுகம் செய்து இப் பல்கலைக்கழகத்துடனான சுமூகமான உறவினை வலுப்படுத்திக் கொள்வதுடன், இந்த ஆண்டும் இதனை மேற்கொள்ளவுள்ளோம்' என்றார்.

இந்த வருடம் ஸெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலில் BSc (கௌரவ) கற்கைநெறி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வருடங்களை கொண்ட இக் கற்கைநெறியை SLIIT கல்வியகத்தில் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, கல்வி திட்டங்களின் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் கல்வி பணியாளர்கள் வருகை தருகின்றனர்.

பேராசிரியர் ஜோன்ஸ் தனது விஜயத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற SHU பழைய மாணவர்களுக்கான விசேட நெட்வொர்க் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டிருந்தார். இதன் போது ஸெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் முதுநிலை, இளநிலை மற்றும் கலாநிதி பட்டம் (PhD) பெற்ற இலங்கை பழைய மாணவர்களுக்கு சிரேஷ்ட பல்கலைக்கழக பணியாளர்களை சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந் நிகழ்வில் ஸெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் பெரேரா -உதவி முதல்வர் கல்வி வளங்கள், ஜேம்ஸ் ரிச்சார்ட்ஸன் - சர்வதேச அபிவிருத்தி பணிப்பாளர், ஸ்டீபன் லோஃட்ஹவுஸ் - SAP திட்ட முகாமையாளர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் வணிக கணினி மற்றும SAP, நீல் ரிச்சார்ட்ஸன் - சிரேஷ்ட விரிவுரையாளர் கலை, கணினி பொறியியல் மற்றும் விஞ்ஞானப் பீடம், அனிதா சந்தாம் - சர்வதேச சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் Sudha Toppo, தெற்காசிய அலுவலக பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

பேராசிரியர் ஜோன்ஸ் அவர்களின் விஜயத்தின் பின்னர், SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தில் திட்டத்தின் தலைவர் நீல் ரிச்சர்ட்ஸினால் நடத்தப்பட்ட பொது விரிவுரையில் ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் மூலம் Hacker போட்டி உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு இணையாக, SLIIT கணினி முறைமைகள் மற்றும் நெட்வொர்கிங் மாணவர்களுக்கு hacking நெறிமுறைகள் தொடர்பான செயலமர்வும் இடம்பெற்றது. Hacker போட்டியில் வெற்றி பெறுபவருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் UK இல் ஆரம்பமாகவுள்ள MSc Information Systems Security பாடநெறியை தொடர்வதற்கான முழுமையான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .