2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

SLIIT நிறுவனத்தின் வணிகப் பிரிவு நடத்திய 'Soft Skills + 2013' நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலை மாணவர்களின் பகுப்பாய்வு, பிரச்சனை தீர்த்தல் மற்றும் தொடர்பாடல் திறனை மேம்படுத்தும் நோக்கில், SLIIT நிறுவனத்தின் வணிகப் பிரிவின் மூலம் கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக மாலபே கம்பஸ் வளாகத்தில் 'Soft Skills + 2013' நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் நாடுபூராகவும் உள்ள உயர்நிலை பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
 
இந் நிகழ்வு இரு பிரிவுகளாக நடைபெற்றன. முதல் பிரிவில், குழு வேலை, ஆக்கத்திறன், நேர முகாமைத்துவம், அழுத்தத்தின் மத்தியில் பணிபுரிதல் மற்றும் பிரச்சனை தீர்த்தல் ஆகிய மென்திறன்கள் (Soft Skills) சம்பந்தப்பட்ட வேடிக்கை நிறைந்த குழு செயற்பாடுகள் இடம்பெற்றன. இரண்டாவது பிரிவில் பொது அறிவு, செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள், விளையாட்டு, வரலாறு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய 5 பிரிவுகளில் நொடி வினாவிடை போட்டி நடைபெற்றது. 
 
இந் நிகழ்வானது தரம் 12 மற்றும் 13 இனைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான மாணவர்களை கவர்ந்திருந்தது. நொடி வினாவிடை போட்டியில் முதலிடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே, கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியும், கொழும்பு மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரியும் வென்றனர்.
 
இந் நிகழ்வு குறித்து SLIITஇன் வணிகப்பிரிவின் டீன் டாக்டர் தீக்ஷன சுரவீர கருத்து தெரிவிக்கையில், 'இந் நிகழ்வினை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள மாணவர்களுக்காக வடிவமைத்தோம். பிரச்சனை தீர்க்கும் திறன், குழு வேலை மற்றும் ஆக்கத்திறன்களை மேம்படுத்தி உயர்நிலை மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், அவர்களின் மென் திறன்களை விருத்தி செய்வதுமே இந் நிகழ்வின் குறிக்கோளாகும்' என தெரிவித்தார். 
 
'மாணவர்கள் தமது உண்மையான திறன்களை வெளிப்படுத்த மென்திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதை நாம் கண்டறிந்தோம். 'மாணவர்கள் தமது வேலைகளில் வெற்றியடைய கல்வித்திறனுடன் இணைந்து மென் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவது SLIIT இன் சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஒன்றாகும்' என SLIIT இன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர்.லலித் கமகே தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .