நாட்டின் முன்னணி CISCO வலைப்பின்னல் கற்கைகளை வழங்கும் கல்வியமாக திகழும் SLIIT CISCO Networking Academy இன் கற்கைகள் சர்வதேச ரீதியில் சிறந்த 10 வீதமான வழிகாட்டல் நிபுணர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
SLIIT CISCO Networking Academy க்கு மதிப்புக்குரிய நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டல் நிபுணர்களை 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக CISCO Systems இடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு பிரதான பங்களிப்பை SLIIT இன் ITSDஇன் தலைமை அதிகாரியும் CISCO வழிகாட்டியுமான உதித கமகே அவர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி கடந்த தசாப்த காலத்தில் வழங்கப்பட்டிருந்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் SLIIT இன் CISCO Networking Academy என்பது பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்தியிருந்தது. இதில் மாணவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கு பங்களிப்பு வழங்குவது, வடிவமைப்பு மற்றும் கணினி வலையமைப்பை பேணுவது ஆகியவற்றுக்கு அவசியமான பங்களிப்புகளை வழங்கியிருந்தமை ஆகியன செல்வாக்கு செலுத்தியிருந்தன.
2007 ஆம் ஆண்டில் SLIIT என்பது CISCO சர்வதேச கௌரவிப்பு விருதை பெற்றிருந்தது. 2008ஆம் ஆண்டில் SAARCஇல் சிறந்த CISCO உள்நாட்டு கல்வியகம் எனும் விருதை வென்றிருந்தது. அத்துடன் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தமைக்காக ASIAPAC விருதையும் தனதாக்கியிருந்தது. 2009 இல் இடம்பெற்ற CISCO வின் முதலாவது தேசிய நெட்ரைடர்ஸ் ஆளுமை போட்டியில் SLIITஇன் இரு அணிகள் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை பெற்றிருந்தனர். தனது வெற்றி பயணத்தை பேணியிருந்த இந்த கல்வியகம் 2010 இல் இதே போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றிருந்தது. 2014 இல் மூன்றாமிடத்தை பெற்றிருந்தது.
SLIIT CISCO அக்கடமியின் மூலம் CCNAயின் Routing மற்றும் Switching, CCNP, CCNA Security, CISCO IT Essentials ஆகிய கற்கைகள் வழங்கப்படுகின்றன. SLIIT CISCO விரிவுரையாளர்கள் SAARC CISCO Council Meeting, ஆசிய பசுபிக் CISCO Council Meeting மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்ற பல்வேறு சர்வதேச பயிற்சிப்பட்டறைகள் மற்றும் செயலமர்வுகளில் பங்குபற்றியிருந்ததன் மூலம் தமது அறிவை மெருகேற்றியிருந்தனர். கணினி வலைப்பின்னல் தொடர்பில் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் 0777 553388 அல்லது 011 -2301904 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.