.jpg)
உள்நாட்டு உணவுத்துறையில் முன்னணி பெருநிறுவனங்களில் ஒன்றான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) ஆனது, அண்மையில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மூலம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விற்பனை காங்கிரஸ் 2014 (NASCO) விருது வழங்கும் நிகழ்வில் இரு தங்கம் உள்ளடங்கலாக 5 விருதுகளை வென்றெடுத்துள்ளது.
சிறந்த விற்பனை செயற்திறனுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வருடாந்தம் SLIM விற்பனை காங்கிரஸ் நிகழ்வு இடம்பெறுகின்றது. SLIM ஆதாரங்களுக்கு அமைய, இந்த வருட நிகழ்விற்கு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 300 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. வேகமாக நகரும் நுகர்வு பொருட்கள் (FMCG) பிரிவின் கீழ் CBL இன் விற்பனை படையினர் இவ் விருதுகளை வென்றிருந்தனர்.
CBL இன் துணை நிறுவனமான CBL ஃபூட்ஸ் இன்டர்நெஷனல்(பிரைவட்) லிமிடெட்டினால் முன்மொழியப்பட்ட அதுல வெலகிரிய விற்கு FMCG பிரிவின் கீழ் ஆண்டின் சிறந்த பிரதேச முகாமையாளருக்கான தங்க விருது வழங்கப்பட்டது. மேலும் பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட்டின் பிரதேச விற்பனை அதிகாரியான சுபுன் குணரத்ன, ஆண்டின் சிறந்த Front Liner இற்கான தங்க விருதினை வென்றெடுத்தார். கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி இன் டி.எம்.நந்ததேவ அவர்களிற்கு ஆண்டின் சிறந்த பிரதேச முகாமையாளருக்கான வெள்ளி விருது வழங்கப்பட்டது.
மேலும் FMCG பிரிவின் கீழ், நிறுவனத்தின் நவீன வர்த்தக குழுவைச் சேர்ந்த இந்திக பெரேராவிற்கு ஆண்டின் சிறந்த விற்பனை பிரதிநிதிக்கான வெள்ளி விருதும், CBL ஃபூட்ஸ் இன்டர்நெஷனல்(பிரைவட்) லிமிடெட்டின் இந்திக ரத்நாயக்க ஆண்டின் Front line இற்கான வெண்கல விருதும் வழங்கப்பட்டிருந்தன.
CBL இன் சாதனை குறித்து இந் நிறுவனத்தின் பணிப்பாளரும்ஃகுழும விற்பனை பொது முகாமையாளருமான ஐ.எம்.கார்ன் கருத்து தெரிவிக்கையில், 'SLIM NASCO விருது விழாவில் பெற்ற எமது வெற்றியானது CBL விற்பனை படையினரின் முயற்சி காரணமாகவே சாத்தியமானது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் எமது தயாரிப்புக்களை கொண்டு செல்லல் நிறுவனத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது. இன்று அந்தந்த உற்பத்தி பிரிவுகளில் சந்தை தலைமைத்துவத்தை பெறுவதற்கு எமது சிறப்பான விற்பனை படையினரே பிரதான காரணம் ஆகும். நடப்பு ஆண்டு முழுவதும். எமது விற்பனை படையினர் தொடர்ச்சியான வெற்றியை குவித்து வருவதுடன், இந்த வெற்றி முழு CBL குடும்பத்தினதும் வெற்றியாகும்' என தெரிவித்தார்.
இலங்கையில் விற்பனை நபர்களின் முயற்சி மற்றும் செயற்திறனை கௌரவிக்கும் நோக்கில் தம்மை அர்ப்பணித்துள்ள ஒரேயொரு தேசிய மட்ட முதன்மை நிகழ்வாக SLIM NASCO வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு விளங்குகிறது. விற்பனை தொழில்முறையின் தரத்தை உயர்த்துதல், செயற்திறன் மற்றும் ஆற்றலை கௌரவித்து வெகுமதி வழங்குதல் மற்றும் தொழிற்துறையின் மதிப்பை மேம்படுத்தல் ஆகியன இதன் குறிக்கோளாக திகழ்கிறது.