2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

SLIM NASCO 2014 2014 விருது விழாவில் டிரையம்ப் நிறுவனத்திற்கு விருதுகள்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற NASCO 2014 விருதுகள் வழங்கும் நிகழ்வில் விற்பனை செயற்திறனுக்கான விருதுகளை வென்றெடுத்தது. கடந்த ஜூலை 25 ஆம் திகதி வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக டிரையம்ப் விருதுகளை வென்றது. வர்த்தகம் மற்றும் விற்பனை என அனைத்து அம்சங்களிலும் செயற்திறனை உறுதி செய்யும் இலங்கையின் முன்னணி பெண்களுக்கான உள்ளாடைகள் வர்த்தகநாமமாக டிரையம்ப் விளங்குகிறது.
 
இலங்கையிலுள்ள விற்பனை படையினரை கௌரவித்து, வெகுமதிகளை வழங்கும் ஒரேயொரு தேசிய நிகழ்ச்சியாக NASCO விருதுகள் வழங்கும் விழா திகழ்கிறது. இந் நிகழ்வினை ஒழுங்கு செய்யும் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) ஆனது, இந்தாண்டு மாநாட்டினை 14வது ஆண்டாக முன்னெடுத்திருந்தது. இதன் போது front line, நிர்வாகம் மற்றும் பிரதேச முகாமையாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் முந்நூற்றுக்கும் அதிகமான பதிவுகள் கிடைத்திருந்தன.
 
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பேஷன் சில்லறை பிரிவு, போட்டித்தன்மையை பரீசிலித்து குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் பன்முக தொழிற்துறைகளிலிருந்து போட்டியாளர்களின் தெரிவு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நான்கு விருதுகளை டிரையம்ப் வென்றெடுத்தது. பிரதேச முகாமையாளர் பிரிவில் தங்க விருதினை அசங்க உபேந்திரா வென்றார். மேலும் நிர்வாகப் பிரிவில் வெண்கல விருதினை லக்மால் பிரதீப் குமாரவும், front line பிரிவில் வெள்ளி விருதினை நிலங்க தில்ஷானும், வெண்கல விருதினை சலிந்த பிரபாத் ராஜபக்ஷவும் வென்றெடுத்தனர். 
 
டிரையம்ப் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விற்பனை தலைவர் சன்ஜீவ கருத்து தெரிவிக்கையில், 'NASCO 2014 நிகழ்வில் பங்குபற்றிய டிரையம்ப் குழுவில் தனித்துவம் மிக்க சிறப்பாக செயலாற்றுபவர்கள் உள்ளனர். இந்த குழுவினரின் சாதனையானது, டிரையம்ப் நிறுவனத்தின் விற்பனை செயற்திறனுக்கான உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதுடன், எதிர்காலத்தில் வெற்றியாளர்களாகக் கூடிய ஆற்றல் மிக்க தனிநபர்கள் பலர் எம்மோடு இணைந்துள்ளனர். டிரையம்ப் நிர்வாகத்தினர் சார்பாக இந்த வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
 
டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'எமது வியாபாரத்தின் மையப்புள்ளி எமது விற்பனை படையினர் ஆகும். NASCO 2014 இல் எமது குழுவினரின் பங்குபற்றுதலானது செயற்திறனை சான்று பகர்வதுடன், எமது சாதனைகள் குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம். NASCO விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் டிரையம்ப் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X