2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'Sri Lankan Entrepreneur of the Year 2013’ இன் தங்க அனுசரணையாளராக ஜனசக்தி

A.P.Mathan   / 2013 ஜூலை 19 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி, இலங்கை வர்த்தக சபை (FCCISL) நடாத்தும் 'Sri Lankan Entrepreneur of the Year 2013' நிகழ்வின் தங்க அனுசரணையாளராக இணைந்துள்ளது. இவ் விருது வழங்கும் நிகழ்வில் உள்நாட்டு வியாபார பிரமுகர்களிடையே காணப்படும் 'முயற்சியாண்மை மனப்பாங்கு' அடையாளப்படுத்தப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வின் தொனிப்பொருளாக 'உங்கள் விடாமுயற்சியே தேசத்தின் இயக்கம்' அமைந்துள்ளது.
 
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற அறிமுக செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் FCCISL இற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர் 'இலங்கையின் வியாபார சமூகத்தின் மத்தியில் தொழில் முயற்சியாண்மை உணர்வினை அபிவிருத்தி மற்றும் மெருகேற்றும் FCCISL இன் செயற்திறன் மிக்க நடவடிக்கைகளுக்கு தங்க அனுசரணையாளராக ஜனசக்தி தனது முழு ஆதரவினையும் வழங்கவுள்ளது' என்றார்.
 
மேலும் அவர் 'தொழில் முயற்சியாண்மை ஜனசக்தியின் இதயத்தில் உள்ளது. எமது நிறுவனத்தை நிறுவிய சி.டி.ஏ.ஷாஃப்ட்டர் ஓர் சிறந்த தொழில் முயற்சியாளர் ஆவார். அவர் ஜனசக்தி வர்த்தகநாமத்தை கடந்த 18 ஆண்டுகளாக தமது பார்வை, அர்ப்பணிப்பு, புதுமை மற்றும் வலிமை மூலம் கட்டியெழுப்பியுள்ளார். எனவே தான், பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில், தமக்கேயுரிய வர்த்தகநாமத்தை கட்டியெழுப்பிக் கொள்வதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தவும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவினை வழங்கி வருகின்றோம்' என்றார்.
 
ஜனசக்தி நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களாக பல மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு சேவையாற்றியுள்ளதுடன், இன்று இலங்கையின் காப்புறுதி துறையில் பலம் மிக்க வர்த்தகநாமத்தை கட்டியெழுப்பியுள்ளது. ஜனசக்தி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தையில் உயர் செலுத்திய மூலதனத்தை கொண்ட காப்புறுதி நிறுவனமாகவும், உயர் இலாபத்தை கொண்ட காப்புறுதி வழங்குனராகவும் மற்றும் இலங்கையில் பட்டியலிடப்பட்ட காப்புறுதிதாரர்களிடையே முதற்தர பங்கிலாப விளைவுகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.
 
'Sri Lankan Entrepreneur of the Year 2013' நிகழ்வானது நாடுபூராகவும் உள்ள 58 வர்த்தக சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் வட, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் வியாபார சமூகத்தினர் அதியுயர் தேசிய கௌரவமாக கருதும் தொழில் முயற்சியாண்மைக்கு விருது வழங்கும் இலங்கையின் ஒரேயொரு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
 
பெண்கள் மற்றும் விசேட தேவையுடைய முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இம்முறை FCCISL ஆனது இரண்டு புதிய பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறிய பெண் முயற்சியாளர்கள் மற்றும் விசேட தேவையுள்ள முயற்சியாளர்களுக்கு தேசிய விருது வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இவ் விசேட விருதுகள் 'இலங்கை பெண்களை தங்கள் தொழில் முயற்சியாண்மை திறனை உணர்ந்து கொள்வதற்கான ஊக்குவிப்பு' மற்றும் 'தடைகளை தாண்டி தொழிலில் சாதித்தல்' போன்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .