2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

TNL Onstage இறுதி நிகழ்ச்சியை மேம்படுத்திய PRO

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி ஆடவர் அழகுசாதன வர்த்தகநாமமான PRO, அண்மையில் TNL Onstage 2014 போட்டிகளின் போது புதுமையான சந்தைப்படுத்தல் பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. உத்தியோகபூர்வ ஒப்பனையாளர் எனும் ரீதியில், இந் நிகழ்வின் இறுதி போட்டியில் ஒருங்கிணைந்த பங்காளராக PRO இணைந்திருந்தது.
 
விஹாரமஹாதேவி திறந்தவெளி Amphitheater இல் இடம்பெற்ற TNL Onstage 2014 நிகழ்ச்சியின் நிறைவில் உள்நாட்டவரின் திறமைகள் மற்றும் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன் போது R & B, பொப், கிளாசிக், hard rock, slow rock மற்றும் alternative போன்ற வௌ;வேறு வடிவங்களில் கலைஞர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர். 
 
TNL Ongoing இறுதி போட்டியில் ஒப்பனையாளர்கள் மூலம் பங்குபற்றியவர்களுக்கு கவர்ச்சிகரமான சிகை அலங்காரங்களை முற்றிலும் இலவசமாக செய்யும் வகையில் நான்கு அழகை மெருகேற்றும் நிலையங்களை PRO அமைத்திருந்தது. மேலும் '‘Dr. Dre Original Beats’ earplugs களை வெல்லும் 10 அதிஷ்டசாலிகளை தெரிவு செய்யும் குலுக்கல் போட்டியையும் PRO முன்னெடுத்திருந்தது.
 
எந்தவொரு சுப்பர் மார்கெட்டிலும் PRO Deo பொடி ஸ்பிறே அல்லது PRO ஹெயார் ஜெல் இனை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டையோ அல்லது ஆதாரத்தையோ PRO அழகுபடுத்தும் கூடத்தில் சமர்ப்பிக்கும் பங்கேற்பாளர்களிற்கு PRO நன்றி செலுத்தும் வகையில் படைப்பாற்றல் மிக்க சிகை அலங்காரங்கள் செய்யப்பட்டன. இந்த அருமையான வாய்ப்பை ஏனையோருக்கும் வழங்கும் முகமாக இந்த நிகழ்ச்சியின் போது PRO உற்பத்திகள் தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. 
 
இப் போட்டியின் போது, PRO உற்பத்திகளை பயன்படுத்தி கவர்ச்சியான தோற்றத்தை பெற்ற சிறந்த TNL onstage இறுதி போட்டியாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. TNL onstage பேஸ்புக் பக்கம் ஊடாக தேர்ந்தெடுத்த இறுதி போட்டியாளர்களின் படத்தினை ரசிகர்கள் like மற்றும் share செய்ய முடிந்திருந்தது. அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்ற இறுதி போட்டியாளருக்கு PRO மூலம் வெகுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
 
'TNL வானொலியின் மிகப்பெரிய வருடாந்த இசை நிகழ்ச்சியை PRO புதிய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எமது அழகை மெருகேற்றும் செயலமர்வின் ஊடாக, பங்கேற்பாளர்களும், ரசிகர்களும் எமது PRO தெரிவுகளின் சிறந்த தரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர். எமது பாவனையாளர்களை மகிழ்விக்கும் மற்றுமொரு களமாக இந்த TNL Onstage நிகழ்ச்சியை கருதுகிறோம்' என PRO இன் வர்த்தகநாம முகாமையாளர் நாலக பெரேரா தெரிவித்தார். 
 
Le Coiffeur Thilaque மூலம் அழகை மெருகூட்டும் செயலமர்வுகளுக்கான ஒப்பனையாளர்கள் வழங்கப்பட்டிருந்தன. 
 
சமுதாயத்தின் முன்னிலையில் பிரகாசித்து சவாலை வெற்றி கொள்வதற்காக PRO, Eau de Toilette, cologne, aftershave, Deo Body Spray மற்றும் Hair-Gel போன்ற இளம் ஆடவர்களுக்கான பல உற்பத்திகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
PRO ஆனது, ஹேமாஸ் மெனுபக்டரிங்(பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுவதுடன், துரித நகர்வு நுகர்வு பொருட்கள், சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் மின்சக்தி போன்ற துறைகள் மீது கவனம் செலுத்தி வரும் பெருநிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங் பிஎல்சி இன் துணை நிறுவனமாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X