2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

Triumphக்கான தங்க விருதை வென்றுள்ள ஃபஷன் பக்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடு முழுவதும் 17க்கும் அதிகமான காட்சியறைகளை கொண்ட இலங்கையின் முன்னணி ஆடை விற்பனைத் தொடரான ஃபஷன் பக், வுசரைஅph இன்டர்நஷனல் நிறுவனத்தின் வருடாந்த விற்பனையாளர்களின் ஒன்றுகூடல் செயலமர்வின் போது 'சிறந்த பிரதான கணக்கு பங்காளர்' விருதுக்கான தங்க விருதை பெற்றிருந்தது. இந்த செயலமர்வு அண்மையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

வருடாந்தம் இடம்பெறும் விநியோகத்தர் ஒன்றுகூடல் நிகழ்வில், நாடு முழுவதையும் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த விநியோகத்தர்கள் பங்குபற்றுவதுண்டு. இந்த செயலமர்வின் நோக்கம், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய விநியோகத்தர்களுக்கு வெகுமதிகளை வழங்கி கௌரவிப்பதாக அமைந்துள்ளது.

இரண்டாவது தசாப்த காலமாக வெற்றிகரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் Triumph வாடிக்கையாளர்களுக்கு புதிய வடிவமைப்பு மற்றும் உள்ளாடைகளை கொள்வனவு செய்வதற்கான பிரத்தியேக பகுதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வில், ஆண்டின் சிறந்த விநியோகத்தர் நிலையம், ஆண்டின் சிறந்த விநியோகத்தர், சிறந்த பிரதான கணக்கு பங்காளர், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய விநியோகத்தர் மற்றும் ஆண்டின் சிறந்த விற்பனையாளர் போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு வெள்ளி விருதை வெற்றி பெற்ற ஃபஷன் பக், சர்வதேச ரீதியில் உயர் தரம் வாய்ந்த உள்ளாடைகளை தயாரித்து சந்தைப்படுத்தி வரும் உற்பத்தியாளருக்கு, தனது உயர் அர்ப்பணிப்பான விற்பனை வாய்ப்பை வெளிப்படுத்தியிருந்ததன் காரணமாக, ஃபஷன் பக் நிறுவனத்தின் கொள்ளுப்பிட்டி விற்பனை நிலையத்துக்கு 'சிறந்த விற்பனை நிலையம்' விருது வழங்கப்பட்டிருந்தது.

ஃபஷன் பக் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சமாதி அபேசிங்க கருத்து வெளியிடுகையில், 'இந்த ஒன்றுகூடலில் பங்குபற்றியிருந்த ஏனைய ஆடை விற்பனை நிலையங்களில், இந்த உயர்ந்த மதிப்பிற்குரிய விருதுகளுக்காக நாம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. Triumph வர்த்தக நாமம் தொடர்பாக நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த சேவைக்கு எமக்கு கிடைத்த மதிப்பாக அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்பான சேவைகளை முன்னெடுக்க எம்மை அர்ப்பணிப்போம்' என்றார்.

1996ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வுசரைஅph இன்டர்நஷனல், தனது விநியோகத்தர் வலையமைப்பை நிறுவியதன் மூலமாக இலங்கை முழுவதும் தனது உற்பத்திகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, கம்பனி இதுவரையில், புத்தாக்க சிந்தனையில், கவர்ச்சிகரமான உள்ளாடைகளை சந்தைப்படுத்தியுள்ளது. இன்று, இந்த வர்த்தக நாமம், சகல தரப்பினராலும் அதிகம் விரும்பப்படும் நாமமாக திகழ்கிறது.

ஃபஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளர் சபீர் சுபைன் கருத்து தெரிவிக்கையில், 'இன்று வேகமாக மாற்றமடைந்து வரும் நவநாகரீக துறையில், சொப்பிங் செய்பவரின் தெரிவு மற்றும் உறவு தொடர்பிலான சந்தைப்படுத்தல் என்பது தொடர்பில், இந்த விருது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. Triumph உடனான எமது பங்காண்மையை மேலும் உறுதி செய்து மேம்படுத்துவது தொடர்பில் எதிர்காலத்திலும் நாம் செயலாற்றவுள்ளோம்' என்றார்.

1994 இல் தனது வர்த்தக செயற்பாடுகளை பங்காண்மை வர்;த்தகமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த ஃபஷன் பக், தற்போது 17 காட்சியறைகளை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஃபஷன் பக், தற்போது 1200 ஊழியர்களை கொண்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகங்களில் ஒன்றாக திகழ்வதுடன், மாற்றமடைந்து வரும் வாழ்க்கை முறைக்கமைவாக நவநாகரீக ஆடைகளை வழங்கி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .