2025 ஜூலை 30, புதன்கிழமை

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்காவுக்கு வெள்ளி விருது

Gavitha   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கர் வர்த்தக நாமத்தின் உரிமையாண்மையைக் கொண்ட பாலுற்பத்தி நிறுவனமான ஃபொன்டெரா பிரான்ட்ஸ், தேசியத் தொழில்நிலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சிறப்பு 2016 விருதுகள் வழங்கலில், பல்தேசிய பிரிவில் வெள்ளி விருதை சுவீகரித்துள்ளது. இதன் மூலம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில், நிறுவனம் காண்பிக்கும் தலைமைத்துவத்தையும் ஈடுபாட்டையும் மேலும் உறுதி செய்துள்ளது.   

இந்தப் பெருமைக்குரிய விருதை ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா நிறுவனத்துக்கு, இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார். இந்த  விருதுகள் வழங்கும் நிகழ்வு, கடந்த வாரம் இடம்பெற்றது.   
தேசியத் தொழில்நிலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கல்வியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த NOSHE விருதுகள் வழங்கல் மூலமாக, இலங்கையின் நிறுவனங்களின் சிறந்த செயற்பாடுகள் கௌரவிக்கப்படுகின்றன.

135க்கும் அதிகமான நிறுவனங்கள், இந்த ஆண்டின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தன. இதில் 75 நிறுவனங்கள் பல்தேசிய பிரிவில் தகைமையைப் பெற்றிருந்தன.   
ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுனில் சேதி இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்காகக் எமக்கு இந்த விருது கிடைத்துள்ளமையானது, மிகவும் பெருமையளிக்கிறது” என்றார்.   

“2014இல், துறையில் NOSHE விருதைப் பெற்றுக்கொண்டதைத்தொடர்ந்து, பல்தேசிய நிறுவனம் என்ற வகையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவில் நாம் பெற்றுள்ள வெள்ளி விருதின் மூலமாக, நாம் கடந்து வந்துள்ள பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது வியாபாரங்களில் மட்டுமின்றி, எமது சமூகத்திலும் இந்தப் பெறுபேறுகள் சிறப்பானதாக அமைந்துள்ளது” என்றார்.   

“எமது 750 உறுதியான அணியினரின் அர்ப்பணிப்பானச் செயற்பாடுகளுக்கு கிடைத்துள்ள கௌரவிப்பாக இந்த விருது அமைந்துள்ளது. பணியாற்றும் சூழலில் நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வதுடன், எமது சமூகங்களைப் பாதுகாப்பதற்கு எமது நிபுணத்துவப்பண்புகளைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .