Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நிலைக்குத்தான போக்குவரத்து முறைமையில் புதிய புரட்சியை ஏற்படுத்த அக்சஸ் இன்டஸ்ரியல் சிஸ்டம்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் அக்சஸ் டவர் II நிர்மாணத்தின் மூலமாக இந்த புதிய புரட்சியை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இந்த டவரின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், நவீன மின்னுயர்த்தியின் மூலமாக, 30 மாடிகளுக்கும் அதிகமான உயரத்துக்கு பயணிகளை மாடிக்கு 3.0 மீற்றர் செக்கன்கள் எனும் வேகத்தில் கொண்டு செல்லும் திறனை கொண்டிருக்கும்.
1997 இல், அக்சஸ் டவர் 1 இன் நிர்மாணத்தின் போது அவர்களுடன் கைகோர்த்திருந்த அக்சஸ் இன்டஸ்ரியல் சிஸ்டம்ஸ், 2003 ஆம் ஆண்டு முழு அளவிலான வியாபார ஸ்தாபனமாக நிறுவப் பட்டது. 18 வருடங்களுக்கு மேலான நிலைக்குத்தான போக்குவரத்து முறையை வழங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு மின்னுயர்த்தி தீர்வுகளை வழங்கி வருகிறது.
கொரியாவின் SIGMA மின்னுயர்த்தி நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள பங்காண்மை ஊடாக அக்சஸ் இன்டஸ்ரியல் சிஸ்டம்ஸ், உலகத்தரம் வாய்ந்த நிலைக்குத்தான போக்குவரத்துத் தீர்வுகளை பெருமளவான வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் SIGMA ஆனது ISO 14001 தரச்சான்றிதழைப் பெற்ற நிறுவனம் என்பதுடன், ஒப்பற்ற பாதுகாப்புக்காக புகழ்பெற்ற நிறுவனமாகும். மின்னுயர்த்தி பயண சௌகர்யம் மற்றும் நவீன வடிவமைப்புக்கள் போன்ற இதர வசதிகளையும் வழங்கி வருகிறது.
நிறுவனத்தின் சேவைகள் மற்றும் அளப்பரிய வளர்ச்சி தொடர்பில் அக்சஸ் இன்டஸ்ரியல் சிஸ்டம்ஸ் பணிப்பாளர் ரஜீவ் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ‘அக்சஸ் இன்டஸ்ரியல் சிஸ்டம்ஸ் ஊடாக வழங்கப்படும் சேவைகளின் மூலமாக, எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிலைக்குத்தான போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாவுள்ளது. சிறந்த பொருட் தீர்வுகள் குறித்து நாம் கவனம் செலுத்துவதுடன், பாதுகாப்பு குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம்.
இதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு 360 பாகை தீர்வுகளை நாம் வழங்குகிறோம். கடந்த 18 வருடங்களாக நிலைக்குத்தான போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வரும் அனுபவத்தைக் கொண்டுள்ள எமது சேவைத்தரத்தை உறுதி செய்யும் வகையில் பரந்தளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளோம். இவர்களுக்கு நாம் காண்பிக்கும் வழிகாட்டல்கள் மற்றும் வெற்றிகரமான நிறுவுகைகள் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டார்
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago