2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அதிசிறந்த செயற்றிறனாளர்களை கௌரவிக்கும் AIA இன்ஷுரன்ஸ்

Editorial   / 2018 மே 28 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்துக்கான AIA இன் வருடாந்த விற்பனை மாநாடு, ‘எதிர்காலத்தை வழிநடத்துவோம்’ (Navigating the Future) எனும் தொனிப்பொருளின் கீழ், ஹம்மாந்தோட்டை சர்வதேச மாநாட்டு நிலையத்தில் நடைபெற்றிருந்தது. 

AIA இன் மிகச்சிறந்த சாதனையாளர்களைக் கௌரவிப்பதற்காகவும் அதைக் கொண்டாடுவதற்காகவும் நாடு முழுவதிலும் இருந்து 1,500 வெல்த் பிளேனர்கள் மற்றும் வெல்த் பிளேனர்களின் முகாமையாளர்கள் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

வெற்றியாளர்கள் அவர்களது பணியை அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் மிகவும் சிறப்பாகச் செய்தமைக்காகவும், AIA இன் வாடிக்கையாளர்களுக்குத் தங்களால் வழங்கக்கூடிய உயர்ந்தபட்ச அளவை விட மேலும் அதிகமானளவு சேவையை வழங்கியமைக்காகவும், மற்றும் காப்புறுதிச் சந்தையில் அவர்கள் முதல் நிலைத் தன்மையை வெளிப்படுத்தி இருந்தமைக்காகவுமாக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.  

இம்மாலைப் பொழுதின் சிறப்பம்சமாக 2017 இன் அதிசிறந்த செயற்திறனாளர்களைக் கௌரவிப்பதற்காக நான்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வருடத்துக்கான ‘மிகச்சிறந்த வெல்த் பிளேனர்’ வெற்றியாளர் விருது, மஹரகம விநியோகப் பிரிவைச் சேர்ந்த சரத் ஜெயலாலுக்கு வழங்கப்பட்டிருந்த அதேவேளை, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே K.P.N பலவர்த்தன (கொழும்பு பிராந்தியம் 3), W.A.K ரொஷான் வீரக்கோன் (கொழும்பு பிரதான பிராந்தியம்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.   

‘மிகச்சிறந்த வெல்த் பிளேனர்களின் முகாமையாளர்’ விருதை, கேகாலைப் பிரதேசம் 2 ஐச் சேர்ந்த N.W.N சேனரத்ன பண்டாரவும் இரண்டாம் இடத்தை M.D துறாஜ் அபொன்சோவும் (கொழும்பு R1) மூன்றாம் இடத்தை M.M சமிந்த லிவேறாவும் (மஹரகம விநியோகப் பிரிவு) தனதாக்கிக் கொண்டனர்.   

‘மிகச்சிறந்த விநியோகப் பிரிவுத் தலைவர்’ விருதை மஹரகம விநியோகப் பிரிவிலிருந்து ரவிண்ட தர்மசேனாவும் அசித்த வடாசிங்க (கொழும்புப் பிரதான பிராந்தியம்), சிடேஸ் ஜயசேகர (மஹியங்கனை) ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டனர். இதேவேளை, G.H.C திலீப அமீன்ரா (திஸ்ஸமஹாராம) ‘மிகச்சிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்’ விருதைத் தனதாக்கிக் கொண்டார்.  

AIA, 2017 இன் ‘மிகச்சிறந்த வளர்ந்து வரும் வெல்த் பிளேனர்கள்’ விருதை திஸ்ஸமஹாராமையைச் சேர்ந்த H. உதயாவுக்கும் (ஆண்) மொரட்டுவைப் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தைச் சேர்ந்த K. D மட்ராகினி தக்ஸிவுக்கும் (பெண்) வழங்கப்பட்டது.

‘மிகச்சிறந்த வளர்ந்து வரும் வெல்த் பிளேனர்களின் முகாமையாளர்’  விருதை, மஹியங்கனையிலிருந்து D.M.B விஜய குமாரசிங்க (ஆண்) பெற்றுக் கொண்டதோடு, கந்தானையைச் சேர்ந்த W.M மயூரி டிலீகா (பெண்) ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். இதேவேளை, கேகாலைப் பிராந்தியம் 2 ஐச் சேர்ந்த சானா டுனுசிங்க ‘வளர்ந்துவரும் விநியோகப் பிரிவுத் தலைவராகப்’ பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.  

AIA இன் ‘எதிர்காலத்தை வழிநடத்துவோம்’ எனும் தொனிப்பொருள் இலங்கையர்களின் திட்டங்களுக்கு உதவுவதையும், அவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதையும் மட்டும் நோக்காமல், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியானதும் மற்றும் விரைவானதுமான சேவையை அதிநவீன தொழில்நுட்பத்துடன் வழங்குவதையும் நோக்காகக் கொண்டு செயற்படுகிறது.  

இடமிருந்து வலமாக: திலீப அமீன்ரா  (மிகச்சிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்), N.W.N சேனரத்ன பண்டார (மிகச்சிறந்த வெல்த் பிளேனர்களின் முகாமையாளர்), ரவிண்ட தர்மசேனா (மிகச்சிறந்த விநியோக முகாமையாளர்), சரத் ஜெயலால் (மிகச்சிறந்த வெல்த் பிளேனர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .