Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 17 , மு.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் LED திரைகளின் மூலம் விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய காட்சிப்படுத்தல் திரைகளை (display wall) 2018 மே 16ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில் LG நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.
LG கிராண்ட் டெக் மாநாட்டில் LG நிறுவனத்தினால் அறிமுகம் செய்து வைத்த வெவ்வேறு வகையான டிஜிட்டல் LED திரைகள் நேரடியாகக் காட்சிப்படுத்தப்பட்டு, காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு இந்தக் காட்சித் திரைகள், அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
இந்த அதிநவீன LG உற்பத்திகள் மூலம், உள்நாட்டு விளம்பரத் துறையில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. உள்நாட்டு வணிக சமூகம், தனது வாடிக்கையாளர்களுக்குத் தமது உற்பத்திகள் தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டுசென்று சேர்ப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக இது அமையும்.
LG கிராண்ட் டெக் மாநாட்டின் போது, அறிமுகம் செய்து வைக்கப்பட்ட OLED டிஸ்பிளே காட்சித்திரையே மிகச்சிறந்த உற்பத்தியாகும். எளிமையான மற்றும் மெல்லியதான இது, இருண்ட கறுப்பு மற்றும் பிரகாசமான வெள்ளை நிறத்திலான நேரடி வர்ணங்களை வெளிப்படுத்துகிறது.
LG 55’ LED திரையில் ஊடாடக்கூடிய பிரம்மாண்ட காணொளிகளைத் திரையிட்டுக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதோடு, இதிலுள்ள குறுகிய bezel மிகவும் இலகுவான வீடியோ சுவராகச் செயல்பட்டு, தனிப் படங்களை மிகவும் துல்லிமாகப் பெற்றுத்தருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வியாபாரத் தேவைகளுக்கு ஏற்றவாறு சரிப்படுத்திக் பயன்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
LG Ultra Stretch Digital Signage தெட்டத் தெளிவான UHD காட்சிகளை 3,840 x 600 Format இனால் காட்சிப்படுத்தப்படுவதோடு, Ultra-Wide அகலத்திரைகளின் மூலம் விளம்பரங்கள், விற்பனை நாமங்களின் காணொளிகள் மற்றும் ஊடாடும் கிரஃபிக்ஸ் இன்டர்ஃபேஸ் ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் இயக்குகின்றது.
விசேட Picture-by-Picture சிறப்பம்சத்தின் மூலம் ஒரு திரையை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட காணொளிகளாக ஒரே நேரத்தில் திரையிட முடியும்.
LED diodes களினால் ஆன ஒளிப்புகும் காட்சித் திரையை விற்பனை நிலையத்தின் முன்புற கண்ணாடியில் பொருத்த முடியும். இதன் மூலம் டிஜிட்டல் உள்ளீடுகள் மற்றும் தகவல்களை மிகவும் துல்லியமான முறையில் காட்சிப்படுத்த முடியும்.
பன்முகப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளக்கூடிய விசேட டிஜிட்டல் காட்சித் திரையாக System-on-Chips காட்சித் திரையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விளம்பர வடிவமைப்புகள் மற்றும் 10-pointmulti-touch ஸ்கிறீன் டிஸ்பிளே இருப்பதால் இதன் சுவர் மீது வரையவும், எழுதவும் முடியும்.
Interactive ProCentric Smart மற்றும் Standard Performance SM5KD வகையினங்களின் அடிப்படையில் உற்பத்திகளை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. ProCentric Smart உற்பத்திகள் ஹோட்டல்களுக்கு பொருந்துவதோடு, SDK tools, Pre-Loaded Apps மற்றும் Content Manager மென்பொருள்களைப் பயன்படுத்தி, தேவையான பணிகளைச் செய்துகொள்ள முடியும்.
LG டிஜிட்டல் LED திரைகள் உலகளாவி ரீதியிலான விருந்தோம்பல், உபசரிப்பு துறைகளில் அதிகமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன் மூலம் ஹோட்டல்களுக்கு விசேட அனுகூலங்கள் கிடைப்பதோடு Digital Navigation, Room Service, Menu Board மற்றும் தேவையான விளம்பரங்களையும் திரையிட முடியும்.
மேலுள்ள LG டிஜிட்டல் LED காட்சித் திரைகள் அனைத்தும் கொள்ளுப்பிட்டி, அபான்ஸ் எலைட் காட்சியறையின் இரண்டாம் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 0777 554 056 என்ற இலக்கத்தின் மூலம் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
LED திரைகளின் மூலம் விளம்பரப்படுத்தல் அறிமுக நிகழ்வில், Dinesh Perera (பிரதி இயக்குநர் அபான்ஸ்), Tito Pestonjee (முகாமைத்துவ இயக்குநர் - எல்ஜி அபான்ஸ்), S H Lee (தலைவர் -ஏற்றுமதி எல்ஜி சிங்கப்பூர்), Brian Yang (தலைவர் ஆசியாவுக்கான B2B வியாபாரப் பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டிருந்தபோது...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
33 minute ago
34 minute ago