Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன், மெட்ரொபொலிடன் நிறுவனம் அண்மையில் அநுராதபுரம் நகரில் புதிய வாடிக்கையாளர் சேவை நிலையம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்திருந்தது.
இந்த திறப்பு விழாவில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த புதிய கிளையில் நவீன IT உற்பத்திகள், கணினிகள்,அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர்கள் மற்றும் உழிநைசளஇ பல்தீர்வுசானதங்கள் மற்றும் தொலைநகல் இயந்திரங்கள் போன்ற அலுவலக தன்னியக்க உற்பத்திகள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும் வளிச் சீராக்கிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் லைட்டிங் முறைமைகள் போன்றன பொறியியல் உற்பத்தி தெரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
'ஒட்டுமொத்த வட மத்திய மாகாணதுக்கும் சேவைகள் மற்றும் விற்பனைச் செயற்பாடுகளை வழங்கும்; நோக்கில் இந்த அநுராதபுரக் கிளை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, நாம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு IT உற்பத்தித் தெரிவுகளை வழங்கும் வகையில் காட்சியறையினுள்ளேயே சில்லறைக் கொள்வனவுகளுக்கான பிரிவையும் ஆரம்பித்துள்ளோம்' என மெட்ரொபொலிடன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.பி.ஜி.நிலந்த தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப திட்டங்களுக்கான, தொழில்நுட்பங்களை வழங்கி இலங்கையின் IT, பொறியியல், அலுவலகத்தன்னியக்கம், தொடர்பாடல் வளர்ச்சியின் முன்னோடியாக மெட்ரொபொலிடன் திகழ்கிறது.
இந்தப் புதியக் கிளையானது இத்தகைய தொழில்நுட்பத்தையும், தனிச்சிறப்பு மிக்க சேவைகளையும் வட மத்திய மாகாணதுக்கு விஸ்தரிக்கவுள்ளதுடன், உலகிலுள்ள மேம்படுத்தப்பட்ட பொறியியல் மற்றும் IT உற்பத்திகளைப் பொது தனியார் மற்றும் SME துறைகள் மற்றும் தனிநபர்களுக்கும் வழங்கவுள்ளது.
5 minute ago
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
2 hours ago
2 hours ago