2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

அனுராதபுரத்தில் AMW இன் புதிய Castrol விநியோக நிலையம்

S.Sekar   / 2022 ஜனவரி 28 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW), இலங்கையில் Castrol லுப்ரிகன்ட்களை விநியோகிப்பதில் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன், தனது புதிய விநியோக நிலையத்தை அனுராதபுரத்தில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Castrol லுப்ரிகேட்டிங் ஒயில் வகைகள் மற்றும் கிறீஸ் வகைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இந்த நிலையத்தினூடாக சேவைகள் வழங்கப்படும்.

259/04/5, வன்னியகுளம், அனுராதபுரம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த நிலையத்தை, AMW இன் முகாமைத்துவ பணிப்பாளர் பீற்றர் மெக்கென்ஸி திறந்து வைத்தார். AMW சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள், பிரதேச விநியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுமார் இரு தசாப்த காலமாக, நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு Castrol சேவைகளை வழங்கி வருவதுடன், தொடர்ச்சியாக தனது வர்த்தக நாம தயாரிப்புகளை அணுகுவதை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட வண்ணமுள்ளது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய நிலையத்தினூடாக பயன் பெறக் கூடியதாக இருக்கும் என்பதுடன், கராஜ் உரிமையாளர்கள், வாகனத் தொடரணி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வாகன பராமரிப்பு சேவை நிலையங்கள் போன்ற பல தரப்பினர்களுக்கு இந்த நிலையத்தினூடாக பயன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அனுராதபுர நிலையத்தின் அங்குரார்ப்பணத்துக்கு முன்னதாக, இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் காணப்படும் விநியோகப் பகுதியாக குருநாகல் நிலையம் காணப்பட்டது.

மேலும், Castrol பிரசன்னத்தை விஸ்தரிப்பதனூடாக நிறுவனத்துக்கு பரந்தளவு சந்தைக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதுடன், சந்தைப் பங்கைப் பெற்றுக் கொள்ளவும் ஏதுவாக அமைந்துள்ளது. அனுராதபுர நிலையத்தினூடாக AMW மற்றும் Castrol போன்றவற்றுக்கு தந்திரோபாய ரீதியான அனுகூலத்தை வழங்குவதாக அமைந்திருப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.

புதிய நிலையம் தொடர்பில் AMW இன் முகாமைத்துவ பணிப்பாளர் பீற்றர் மெக்கென்ஸி கருத்துத் தெரிவிக்கையில், “வட மத்திய மாகாணத்தில் எமது Castrol பிரசன்னத்தை விரிவாக்கம் செய்ய முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தப் பிரதேசத்தில் வணிக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் மீண்டெழும் தன்மையை அவதானிக்க முடிகின்றது. இதனூடாக எமது உயர் தரம் வாய்ந்த, உயர் வினைத்திறனான தயாரிப்புகளை அதிகளவு தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு விநியோகிப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.

2002 ஆம் ஆண்டு முதல் AMW இனால் Castrol சந்தைப்படுத்தப்படுகின்றது. வாகனங்கள் பராமரிப்புத் துறையில் 70 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள AMW இனால், எந்தவகையான வாகனங்களுக்கும் பொருத்தமான Castrol லுப்ரிகன்ட்கள் அதன் நாடளாவிய விநியோகத்தர் வலையமைப்பினூடாக வழங்கப்படுவதுடன், அவற்றினூடாக வாகனங்கள், தொழிற்துறை மற்றும் கடல்சார் பயணங்களுக்கான ஒயில் வகையாக Castrol வர்த்தக நாமத்தை புகழ்பெறச் செய்துள்ளன.

AMW லுப்ரிகன்ட்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது அனுராதபுர நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த நிலையத்தினூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் வினைத்திறன் வாய்ந்த Castrol ஒயில் மற்றும் கிறீஸ் வகைகளை எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கக்கூடியதாக இருக்கும். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நாமத்துடன் நாம் கொண்டுள்ள வெற்றிகரமான பங்காண்மைக்கு எடுத்துக் காட்டாக இந்த புதிய நிலையத்தின் அங்குரார்ப்பணம் அமைந்துள்ளது. சந்தையில் எமது பிரசன்னத்தை தொடர்ச்சியாக கட்டியெழுப்பி, எமது சந்தை பங்கை அதிகரித்துக் கொள்வது எமது இலக்காகும். அதனூடாக அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்காக எமது உறுதி மொழியை நிறைவேற்றுவது இலக்காகும்.” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .