2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அப்பிளின் புரொஜெக்ட் டைட்டன் நிறைவேறுமா?

Gavitha   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சியாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டிருந்த புரொஜெக்ட் டைட்டன் (Project Titan), முறையான தலைமைத்துவமின்றி கைவிடப்படக்கூடிய நிலையை எதிர்கொண்டுள்ளதாக, சர்வதேச செய்திச் சேவைகள் அறிவிக்கின்றன.  

அப்பிள் நிறுவனத்தினால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட கார் தயாரிப்பு செயற்றிட்டத்தின்  இந்தப் புரொஜெக்ட் டைட்டன் குறித்து, அதன் வடிவமைப்பாளர்கள் மத்தியில் முறையான திட்டமிடலின்மை காரணமாக, அந்தத் திட்டத்தில் பணியாற்றிய பெருமளவான பொறியியலாளர்கள் விலகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்தக் காரை வடிவமைக்கும் போது, குறித்த காரின் வன்பொருளின் மீது அல்லது மென்பொருளின் மீது கவனம் செலுத்துவது குறித்த முரண்பாடு இவ் வடிவமைப்பாளர்கள் மத்தியில் நிலவியதாகவும், குறித்த சர்வதேச செய்திச் சேவைகள் அறிவித்துள்ளன.  

இந்நிலையில், இந்தக் கார் தயாரிப்புத் திட்டம் குறித்து இதுவரையில் பொதுமக்கள் மத்தியில் எவ்வித அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அப்பிள் நிறுவனம், தன்னியக்க கார் செலுத்தும் கட்டமைப்பு ஒன்றை நிறுவுவது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X