Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 02 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரநாயக்க, சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணித்து கையளிக்கும் வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன் அண்மையில் அரநாயக்கவில் நடைபெற்றது.
ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெயசீலன் ஞானத்தின் வழிகாட்டலின் கீழ், அரநாயக்க சாமசர மலை மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததுடன், துறைசார்ந்த சுற்றுப்பயணங்களை முன்னெடுத்திருந்ததனூடாக இந்தத் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில், முழுமையான பங்களிப்பை ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிட்டெட்டின் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளரும் இந்தத் திட்டத்தின் இணைப்பாளருமான பிரியந்த ஜயசிங்க வழங்கியிருந்தார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த காணியில், நிர்மாணிக்கப்பட்ட இந்த சகல இல்லங்கள் செயற்றிட்டத்துக்கு ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட்டினால் முதலீடு செய்யப்பட்டிருந்த தொகை 50 மில்லியன் ரூபாய் என்பதுடன், ஒரு வீடு சுமார் 781 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. தேசிய நிர்மாண பரிசோதனை அமைப்பினால் வரையறுக்கப்பட்டுள்ள நியமங்களின் பிரகாரம் வீடுகளை வடிவமைப்பது மற்றும் நிர்மாணிப்பது போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தச் செயற்றிட்டம் தொடர்பில், ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளரும் இந்தச் செயற்றிட்டத்தின் இணைப்பாளருமான பிரியந்த ஜயசிங்க, “நாட்டில் ஏற்படும் பாரிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகளையும் ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட், தனது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளில் முக்கியத்துவம் வழங்கி மேற்கொள்கிறது. 50 மில்லியன் ரூபாய் வரையிலான செலவீனத்தில் இந்தச் செயற்றிட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளமை, எமது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்துள்ளது.
“இயற்கை அனர்த்தங்களினால், தமது வீடுகளை இழந்த மக்களுக்கு இது போன்று , பொது பகுதிகள் நிர்மாணிக்கும் போது, அவற்றுக்கு அவசியமான கூரைகளை வழங்கும் வகையில் கிரிசோடைல் கூரைத்தகடுகளை இலவசமாகப் பெற்றுக்கொடுப்பதை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்கிறோம். அதற்கமைய, முன்னெடுக்கப்படும் எமது சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டத்தின் முக்கிய அங்கமாக அரநாயக்க பிரதேசத்தில் 20 வீடுகள் நிர்மாணிக்கும் பணியை குறிப்பிட முடியும். இதனூடாக இந்த அனுகூலம் பெறும் குடும்பங்களுக்கு பெரும் மனநிம்மதி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago