2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அறிமுகமாகிறது யூனியன் வங்கியின் முதலீட்டுத்திட்டம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி இன்வெஸ்ட் ப்ளஸ் (Union Bank Invest Plus)முதலீட்டுத்திட்டத்தை யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனூடாக சேமிப்பாளர்கள் தமது கனவுகளையும் இலக்குகளையும் நிஜமாக்கிக்கொள்ள முடியும் என வங்கி அறிவித்துள்ளது.   

யூனியன் வங்கியினால் அளிக்கப்படும் தனிப்பட்ட நிதித்தீர்வுகள் தொகுப்பின் புதிய நடைமுறைக்கேற்ற சேர்க்கையான யூனியன் வங்கி இன்வெஸ்ட் ப்ளஸ், மிகச்சிறந்த நிதித் திரும்பல்களுடன் மேம்பட்ட வங்கி

அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   
இப்புதிய சில்லறை வர்த்தக வங்கியியல் தீர்வு குறித்து கருத்துரைத்த யூனியன் வங்கியின் சில்லறை வர்த்தக வங்கியியல் துணைத்தலைவர் சாயா ஜயவர்த்தன “யூனியன் வங்கி இன்வெஸ்ட் ப்ளஸ் எமது வாடிக்கையாளர்கள் தமது எதிர்காலம் குறித்து சிறந்த முறையில் திட்டமிட்டுக் கொள்வதற்கும், அவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை நிஜமாக்கிக்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

யூனியன் வங்கி இன்வெஸ்ட் ப்ளஸ் உடன் நபர் ஒருவர் தமது விருப்பத்துக்குரிய எதிர்கால இலக்கை அடையும் நோக்கில் மாதாந்தம் எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை கொண்டுள்ளார் என்பதுடன், தமது கனவினை எத்தனை வருடங்களில் பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் முழுமையாக அறிந்துள்ளார். இதன் ஊடாக எமது வாடிக்கையாளர்கள் தமது எதிர்காலம் குறித்து, அது தமது பிள்ளைகளுக்கான உயர்கல்வியாக இருப்பினும், தமக்கென சொந்த வர்த்தகம் ஒன்றினை ஆரம்பிப்பதாக இருந்தாலும், அல்லது தமது ஓய்வூதிய நிதியைக் கொண்டு கட்டடம் ஒன்றை கட்டமைப்பதாக இருப்பினும், சரியான முறையில் திட்டமிட முடியும்.   

இந்த முன்மொழிவானது, பல்வேறு சமூக கட்டமைப்புகளிலிருந்து வரும் மக்களின் எதிர்கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், கட்டமைப்புமிகு சேமிப்பு சுற்று ஒன்றை பழக்கப்படுத்திக் கொண்டவாறு, எதிர்காலத்தில் சிறப்பான திரும்பல்கள் ஊடாக தமக்கு வெகுமதியளித்துக்கொள்ளவும் இத்திட்டம் வழியமைத்துக்கொடுக்கின்றது” என தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X