Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்ஃபா அப்பரல்ஸ், தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆடை உற்பத்தி மற்றும் லெதர் தயாரிப்புகள் உற்பத்திப் பிரிவின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் (NCCSL) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக சிறப்பு விருதுகள் 2021 இல் இந்த கௌரவிப்பை அல்ஃபா அப்பரல்ஸ் பெற்றுக் கொண்டது.
அல்ஃபா அப்பரல்ஸ் ஆடை உற்பத்தித் துறையிலும் பொருளாதாரத்திலும் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் எழுச்சியை மீள உறுதி செய்யும் வகையில் இந்த சாதனை அமைந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில், 24 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், 2019/20 ஆம் ஆண்டு காலப்பகுதியின் ‘நடுத்தர” பிரிவில் “சிறந்த ஆடை உற்பத்தி ஏற்றுமதியாளர்” எனும் கௌரவிப்பையும் பெற்றுக் கொண்டது.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பு வழங்குவதில் முன்னோடியாக ஒமெகா லைன் குழுமத்தின், அல்ஃபா அப்பரல்ஸ் திகழ்கின்றது. நிறுவனத்தின் சகல உள்நாட்டு இணை நிறுவனங்கள் மத்தியில் 13,000 க்கும் அதிகமான மொத்த பணியாளர்களைக் கொண்டுள்ளதுடன், பல சவால்களுக்கு மத்தியிலும் அதிகளவு மீண்டெழுந் தன்மையை வெளிப்படுத்துகின்றது.
அல்ஃபா அப்பரல்ஸ் 2006 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது முதல், தொடர்ந்தும் 2400க்கும் அதிகமான இளைஞர்களுக்கு தமது திறன்களை வெளிப்படுத்தி தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்த வண்ணமுள்ளது. இதனூடாக ‘உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு சிறந்த இடம்” எனவும் அறியப்படுகின்றது.
அல்ஃபா அப்பரல்ஸ் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான பீலிக்ஸ் ஏ. பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எமது நிறுவனத்தின் பெறுமதி சங்கிலியுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபருடனும் இந்த சாதனையை பகிர்ந்து கொள்வதில் நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எமக்கு சிறந்த ஊக்கமளிப்பவர்களாக அமைந்திருக்கும் எமது ஊழியர்களிலிருந்தே இது ஆரம்பிக்கின்றது. எமது பெறுமதி வாய்ந்த வளமாக எமது ஊழியர்கள் அமைந்திருப்பதுடன், அவர்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்கான பெறுமதிகள் நிறைந்த சமமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் சகல பணிகளையும் முன்னெடுக்கின்றோம். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை கொண்டு வரும் தொழிற்துறையின் அங்கமாக நாம் அமைந்திருப்பது மாத்திரமன்றி, சமத்துவமான மற்றும் உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சியை தூண்டி,பல்லாயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடிந்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
நிறுவனத்தின் பெருமளவான வெற்றிகரமான செயற்பாடு மற்றும் வளர்ச்சியை அதன் பெறுமதி வாய்ந்த மனித மூலதனத்தினூடாக அறியக்கூடியதாக இருக்கும், அதனை ஏற்று, தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் அதில் தனித்தனியாக கவனம் செலுத்துகின்றனர். அல்ஃபா அப்பரல்ஸ் தமது ஊழியர்களுக்கு, சிறந்த பணியிடச் சூழலுடன் தொடர்ச்சியாக பயிலல், பயிற்சி, தொழில்நிலை விருத்தி வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்கின்றது. இதனூடாக ஊழியர்கள் பணியிலும் பிரத்தியேக வாழ்க்கையிலும் அனுகூலம் பெறக்கூடியதாக இருக்கும். இலவச போக்குவரத்து வசதிகள், வீடமைப்பு மற்றும் வாகன கடன்கள், தொழில்நிலை வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனை வழங்கல் போன்ற பல வசதிகளையும், நிறுவனம் தமது ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
41 minute ago
47 minute ago
56 minute ago