2025 ஜூலை 30, புதன்கிழமை

ஆ​யுர்வேத மருந்துப் பொருட்களின் புதிய கையேடு அறிமுகம்

Gavitha   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஆயுர்வேத ஒளடதங்கள் மற்றும் மூலிகை சுகாதாரப் பொருட்களின் உற்பத்தியாளரான தீகாயு ஆயுர்வேத மற்றும் மூலிகைத் தாவர பொருட்கள் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் 18 பாரம்பரிய ஆயுர்வேத மற்றும் மூலிகைத் தாவர மருந்துப் பொருட்கள் அடங்கிய சிங்கள மொழியினாலான புதிய கையேட்டை (Product brochure) அண்மையில் அறிமுகம் செய்தது.  

“தீகாயு செபா சொபா ஹெல ஒசு ரெச” (Deegayu Sabaa Sobaa Hela Osu Rasa) என்ற தலைப்பிலான இந்தப் பாரம்பரிய ஆயுர்வேத மற்றும் மூலிகைத் தாவர மருந்துப் பொருட்கள் கையேட்டை விரைவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியிடுவதற்கு தீகாயு நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.  

இயற்கை ஆயுர்வேத மூலிகைகளை, நவீன தொழில்நுட்பத்துடன் உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களுக்கு அமைவாக உயர் தரத்தில் தயாரிக்கப்படும் தீகாயு ஆயுர்வேத மற்றும் மூலிகைத் தாவர மருந்துப் பொருட்கள் நவீன அலோபதி மருத்துவ முறைகளினால் குணப்படுத்த முடியாத நோய் நிலைமைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .