2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கி 700 மில். அமெ.டொ. நிதி உதவி

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டில் 457 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் தொகையை 2016இல் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தத் தொகை மேலும் 200 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டேக்ஹிகோ நகாஹோ கருத்து தெரிவிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி திருப்தியடைவதாகவும், 2016ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக அமைந்திருக்கும் என தாம் கணிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சியும் தற்போது காணப்படும் 5.8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கும் என அறிவித்தார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிகளவு அபிவிருத்தி வாய்ப்புகள் காணப்படுவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானவையாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X