2025 மே 21, புதன்கிழமை

ஆசியாவில் பணியாற்றக்கூடிய சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக 99X Technology தெரிவு

Editorial   / 2018 மே 14 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

    2018ஆம் ஆண்டில் ஆசியாவில் பணியாற்றக்கூடிய சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக Great Place To Work நிறுவனத்தினால், 99X Technology தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றிருந்த சுமார் 1,200க்கும் அதிகமான நிறுவனங்கள் மத்தியில் 99X Technology ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. 

ஒன்பது நாடுகளின் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களின் கருத்துக்கணிப்புகள் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன. ஊழியர்களுக்கு முன்னுரிமை, ஊழியர் நம்பிக்கை ஆகியன, ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக 99X Technology தெரிவாவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. 

   பணியாற்றுவதற்குச் சிறந்த நிறுவனங்கள் தரப்படுத்தலில் வழமையாக உள்வாங்கப்படும் நிறுவனமாக திகழும் 99X Technology, பிராந்திய தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்ட இரண்டாவது தடவை இதுவாகும். 

இதற்கு முன்னதாக 2015 இல் ஆசிய தரப்படுத்தலில் இந்நிறுவனம் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதனூடாக சர்வதேச ரீதியில் முன்னணி நிறுவனங்களான Cisco, Salesforce, DHL, Hilton Worldwide, Omnicom Media Group, Godrej Consumer Products, The Oberoi Group மற்றும் பலவற்றின் வரிசையில் ஒன்றாக 99X Technologyஐயும் நிலைநிறுத்தியுள்ளது. 

இந்தத் தரப்படுத்தல் தொடர்பில் 99X Technology இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்துத் தெரிவிக்கையில், “எமது மாபெரும் சொத்தாக எமது ஊழியர்கள் அமைந்துள்ளனர். 

எமது ஊழியர்களின் ஆர்வம் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான தொழில் கலாசாரத்தை ஏற்படுத்த நாம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். இதனூடாக அவர்களுக்கு தமது முழுத்திறமைகளையும் வெளிப்படுத்த முடியும். 

தொடர்ச்சியாக இந்த கட்டமைப்பை மேம்படுத்தி வலிமைப்படுத்துவதை நாம் மேற்கொண்டு வருகிறோம். எனவே இந்த முயற்சிகளுக்குGreat Place To Work-இனால் கௌரவிப்பு வழங்கப்படுவதும், ஆசியாவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளமையும் மேலும் எம்மை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது” என்றார். 

 இந்தக் கட்டமைப்பில் காணப்படும் சில முக்கிய அம்சங்களாக, சமநிலையான நிறுவன கட்டமைப்புடன் சுய ஒழுங்குபடுத்தல் அணிகள், தமது பிரதான தொழில்நிலைகளுக்கு அப்பால் ஊழியர்களுக்கு சவால்களை வழங்கக்கூடிய சுய ஒழுங்குபடுத்தல் அணிகளை கொண்டிருத்தல் மற்றும் பதவிகளல்லாத தலைவர்கள் என்பதனூடாக, தமது தொழில்நிலைகள் எதுவாக இருந்தாலும் புதிய பொறுப்புகளை ஊழியர்களுக்கு ஏற்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவது போன்றன அடங்கியுள்ளன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .